யு.எஸ்.: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு ஆதரவான பெண்ணை சுட்ட 4 வயது மகன்
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 4 வயது சிறுவன் தனது தாயை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஜாக்சன்வில் பகுதியைச் சேர்ந்தவர் ஜேமி ஜில்ட்(31). அவர் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் குரல் கொடுத்து வருகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அவர் தனது டிரக்கில் குதிரை வாங்க கிளம்பினார். டிரக்கின் பின் இருக்கையில் தனது 4 வயது மகனை அமர வைத்திருந்தார். வாகனத்தில் துப்பாக்கி அதுவும் தோட்டாக்களுடன் இருந்தது.

ஜேமி டிரக்கை ஓட்ட அவரது மகன் கையில் அந்த துப்பாக்கி கிடைத்தது. சிறுவன் துப்பாக்கியை எடுத்து அழுத்த குண்டு சீட்டை துளைத்துக் கொண்டு ஜேமியின் முதுகில் பாய்ந்தது. குண்டு பாய்ந்த பிறகு அவர் டிர்க்கை தாறுமாறாக ஓட்ட அதை பார்த்து ஒரு போலீஸ்காரர் அங்கு வந்தார்.
Got to play with my new toy today! Time to clean it! pic.twitter.com/1lkYo8b3sh
— jamie gilt (@jamiegilt) January 24, 2015
டிரக் நின்ற பிறகு தான் ஜேமிக்கு குண்டடிபட்டிருந்தது தெரிய வந்தது. உடனே ஜேமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகன் உறவினர்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளார்.
தனது துப்பாக்கியை சுத்தம் செய்ய தற்போது தான் நேரம் கிடைத்தது என்று ஜனவரி 24ம் தேதி ஜேமி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். தற்போது சிறுவன் கையில் கிடைத்த துப்பாக்கி அது தானா என்பது தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications