அநியாயமாக போன 2 உயிர்.. அவனா இப்படி செய்தான்.. எப்பவுமே அமைதியா இருப்பானே.. அதிர்ச்சியில் பள்ளி!

சக நண்பர்கள் 5 பேரை பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்டுவிட்டான்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கலிபோர்னியாவில் சக மாணவர்களை சுட்டு தானும் தற்கொலை முயற்சி செய்த மாணவன்

    கலிபோர்னியா: கருப்பு கலர் டிரஸ் அணிந்து கொண்டு ஸ்கூலுக்குள் நுழைந்த மாணவன் ஒருவன், சக மாணவர்களையே துப்பாக்கியால் சுட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளான்... "அவனா இப்படி செய்தான்.. எப்பவுமே ரொம்ப அமைதியா இருப்பானே.. என்று அதிர்ச்சியில் வாய்பிளந்து சொல்கிறார்கள் சக மாணவர்கள்!

    தெற்கு கலிபோர்னியா, சாண்டா க்ளாரிடாவில் சவுகஸ் ஹை ஸ்கூல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் ஒருவனுக்கு பிறந்த நாள்.. ஆனால், திடீரென ஸ்கூல் காம்பசுக்குள் நுழைந்து அவன், அங்கிருந்த 5 மாணவர்களை சரசரவென துப்பாக்கியால் சுட்டுவிட்டான்.

    இதில், 16 வயது சிறுமியும், 14 வயது சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் சுருண்டு விழுந்தனர். பின்னர், சம்பந்தப்பட்ட மாணவன், அதே துப்பாக்கியால், தன் தலையிலும் வைத்து சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்சி செய்துள்ளான்.

    அலறி ஓடினர்

    அலறி ஓடினர்

    இவன் ஏன் இப்படி செய்தான் என்று தெரியவில்லை.. ஆனால், கருப்பு கலர் டிரஸ் அணிந்து வந்திருக்கிறான். ஸ்கூலில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதுமே, மற்ற மாணவர்கள் அலறி துடித்து ஆளுக்கு ஒரு பக்கம் சிதைந்து தலைதெறிக்க ஓடியுள்ளனர். ரொம்ப நேரத்துக்கு கிளாஸ் ரூமை விட்டு மாணவர்கள் வெளியே வரவே இல்லை.. அவர்களுக்கு பள்ளியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதுகூட உடனே புரிந்து கொள்ள முடியவில்லை. விஷயம் தெரிந்து பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கும் ஸ்கூலுக்கு வந்துவிட்டனர்.

    விசாரணை

    விசாரணை

    இதையடுத்து, தகவலறிந்து வந்த போலீசார் சுட்டு கொன்றவனை சுற்றி வளைத்து பிடித்தனர். பயந்து நடுங்கி பதுங்கி கொண்டிருந்த மற்ற மாணவர்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் வெளியே அனுப்பி வைத்தனர். உடனடியாக அந்த ஸ்கூலும் இழுத்து மூடப்பட்டது. எதற்காக 2 பேரை சுட்டு கொன்றான் என்பது குறித்து விசாரணையையும் கையில் எடுத்துள்ளனர்.

    தீவிர சிகிச்சை

    தீவிர சிகிச்சை

    5 பேரை சுட்ட மாணவன், எப்பவுமே அமைதியா இருப்பானாம்.. யாருடனும் அவ்வளவாக பேசவும் மாட்டான்.. அவனா இப்படி செய்தது என்று எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது என்று சக மாணவர்கள் அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்கள். இப்போதைக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த மாணவன் சீரியஸாக ஆஸ்பத்திரியில் இருக்கிறானாம். சிகிச்சை தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு பிறகுதான் விசாரணை தீவிரமடையும் என தெரிகிறது. ஆனால், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அதிர்ச்சி சம்பவம்

    அதிர்ச்சி சம்பவம்

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது சர்வசாதாரணமான ஒன்றுதான் என்றாலும், அது ஸ்கூல் வரை இப்படி வளர்ந்து, வன்முறைகளுக்கு அதிக அளவில் வித்திட்டு வருவதும் அதிர்ச்சிகரமாக உள்ளது. இப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டால், தங்களை எப்படி காப்பாற்றி கொள்வது, மாணவர்கள் என்ன செய்வது என்பதற்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறதாம். இருந்தாலும், இந்த வருஷத்தில் மட்டும், பள்ளி வளாகத்துக்குள்ளேயே நடந்த 85வது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+