லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்டில் துப்பாக்கி சூடு? .. "சவுண்டு" கேட்டு மிரண்டு ஓடிய பயணிகள்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் வெளியேறி ஓடுவதை போல காட்சிகள் வெளியான நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தை ஏர்போர்ட் நிர்வாகம் மறுத்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் மற்றும் அமெரிக்க டிவி சேனல்களில் இந்திய நேரப்படி இன்று காலையில் ஒரு காட்சி வெளியாகி மக்களை பீதிக்குள்ளாக்கியது. அந்த காட்சியில் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து கும்பல், கும்பலாக மக்கள் பதறியடித்தபடி வெளியே ஓடிவரும் காட்சி இடம் பெற்றிருந்தது.
Police working hard to keep us safe #lax fastest response I could have imagined pic.twitter.com/xkec8cWn52
— Kenny Stavert (@TheRedBari) August 29, 2016
துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாகவும், போலீசார் விரைந்து வந்ததாகவும், சில பயணிகள் டிவிட் செய்திருந்தனர். தரையோடு தரையாக மக்கள் படுத்து கிடப்பதை போன்ற போட்டோக்களும் டிவிட்டரில் வெளியிடப்பட்டன.
லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும், இதனால்தான் இந்த பரபரப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
Police searching LAX after reports. All precautions being taken to ensure safety of public. Remain calm. Thank you for your cooperation
— LA Airport PD (@LAAirportPD) August 29, 2016
இதனிடையே, ஏர்போர்ட் நிர்வாகம் இதை மறுத்துள்ளது. திடீரென பெரிய சத்தம் வெளியே கேட்டதாகவும், அதனால் மக்கள் பீதியடைந்ததாகவும் ஏர்போர்ட் நிர்வாகம் கூறுகிறது. சத்தம் ஏன் வந்தது என்பதை போலீசார் விசாரித்து வருவதாக ஏர்போர்ட் நிர்வாகம் கூறியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications