100க்கும் மேல் பிணைக்கைதிகள்.. காபூல் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்.. 26/11க்கு நிகரான பயங்கரம்
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். நேற்று மாலை ஹோட்டலுக்குள் சென்ற தீவிரவாதிகள் இன்னும் அங்கு பிணைக்கைதிகளை பிடித்து வைத்து இருக்கிறார்கள்.
தற்போது சில பிணைக்கைதிகள் மட்டும் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். ராணுவம் இவர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகிறது.
மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்தது போலவே தீவிரவாதிகள் அந்த ஹோட்டலுக்குள் புகுந்து தாக்கி உள்ளனர். இன்னும் இரண்டு தீவிரவாதிகள் உள்ளே இருப்பதாக தகவல் வந்து இருக்கிறது.

உள்ளே சென்றனர்
முதலில் இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் நேரப்படி சரியாக நேற்று இரவு 9 மணிக்கு நடந்து இருக்கிறது. காபூலில் இருக்கும் இண்டர்காண்டினேன்டல் ஹோட்டலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. நான்கு தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே சென்று இருக்கிறார்கள். முதல் தரை தளத்தில் மோசமாக துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள்.

ஊழியர்கள்
அங்கு கீழே இருந்த ஊழியர்கள் அனைவரையும் முதலில் தாக்கி இருக்கிறார்கள். முக்கியமாக ஹோட்டலில் பாதுகாப்பிற்கு இருந்த அதிகாரிகளை சுட்டுள்ளனர். அதன்பின் அங்கு இருக்கும்மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

ஆயுதம்
இவர்கள் சிறிய ரக குண்டுகள் நிறைய வைத்து இருந்ததாக ஆப்கான் ராணுவம் தெரிவித்து இருக்கிறது. அதேபோல் அனைவரும் நிறைய ஏகே 47 ரக துப்பாக்கிகளும், கை துப்பாக்கிகளும் வைத்துள்ளனர். நால்வரும் கையில் பெரிய பைகளில் ஆயுதங்கள் கொண்டு வந்துள்ளனர்.

மக்கள்
இவர்கள் அந்த ஐந்து மாடி ஹோட்டலில் உள்ள அனைத்து மக்களையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். 100கும் அதிகமான மக்கள் மாட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் முக்கிய ஐடி கருத்தரங்கு ஒன்று அங்கு நடந்து இருக்கிறது. அவர்களும் அங்கே இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

2 பேர்
தற்போது ராணுவம் இதில் இரண்டு தீவிரவாதிகளை கொலை செய்து இருக்கிறது. இவர்கள் இருவரும் தரைத்தளத்தில் இருந்துள்ளார்கள். உள்ளே சென்று ராணுவம் அதிரடியாக அவர்களை வீழ்த்தியது. இதில் ராணுவ வீரர்களும் மோசமாக காயம் அடைந்தனர்.

இன்னும் இருவர்
அந்த ஹோட்டலில் இன்னும் 2 தீவிரவாதிகள் உள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது மேல் மாடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள்தான் அதிகமான பிணைக்கைதிகளை பிடித்து வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

5 பொதுமக்கள்
இதுவரை 5 பொதுமக்கள் மரணம் அடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இன்னும் பலர் மரணம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை 100 பேர் ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications