Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகில் இதுவரை இல்லாத புதிய ரத்த வகை கண்டுபிடிப்பு! இவர் ஒருவருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருக்காம்

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: உலகில் இதுவரை இல்லாத முற்றிலும் புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது. இந்த புதிய ரத்த வகையை இப்போது சர்வதேச ரத்த மாற்றச் சங்கமும் அங்கீகரித்துள்ளது. EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை உலகிலேயே ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகடிவ், பி பாசிட்டிவ், பி நெகடிவ் என ஏகப்பட்ட ரத்த வகைகள் உள்ளன. எமர்ஜென்சி காலத்தில் ரத்தம் தேவைப்படும் போது உட்படப் பல சூழல்களில் இந்த ரத்த க்ரூப் முக்கிய தேவையாக இருக்கிறது. இதற்கிடையே இப்போது ஆய்வாளர்கள் முற்றிலும் புதிய வகை ரத்தத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

Gwada Negative World s Rarest Blood Type Discovered in Guadeloupe Woman

குவாடா நெகடிவ்

குவாடா நெகடிவ் அல்லது EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயர் வைத்துள்ளனர். இதுவரை உலகில் இருக்கும் வேறு எந்தவொரு ரத்த வகையைப் போலவும் இது இல்லை. முற்றிலும் தனித்துவமான ரத்த வகையாக இது இருக்கிறது. கடந்த மாதம் வரை உலகிலேயே இவர் ஒருவருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் மிகவும் அரிதான ரத்த வகையாக குவாடா நெகடிவ் மாறியுள்ளது.

என்ன காரணம்!

குவாடா நெகடிவ் என்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ரத்தத்தின் பெயர். இந்த குவாடா நெகடிவ் வகையில் EMM ஆன்டிஜென் இருக்காது. இதன் காரணமாகவே இதை EMM நெகடிவ் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆன்டிஜென் பொதுவாகச் சிவப்பு ரத்த அணுக்களில் இருக்கும்.. மேலும் இது ஒரு High-incidence antigens ஆகும். உலகில் உள்ள கிட்டதட்ட அனைத்து மனிதர்களிடமும் இந்த வகை ஆன்டிஜென்கள் இருக்கும். அப்படி இருக்கும்போது இந்த நபரிடம் மட்டும் ஆன்டிஜென்கள் இல்லாதது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒரு ரத்த வகையைப் புதிதாக அங்கீகரிக்க பல்வேறு கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த புதிய ரத்த வகை அந்த அனைத்து கண்டிஷன்களும் பூர்த்தி செய்கிறதாம். மேலும், உலகில் இதுவரை 47 ரத்த வகைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் இது 48ஆவது ரத்த வகையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாருக்குக் கண்டுபிடிக்கப்பட்டது

2011இல் பாரிஸில் வசித்து வந்த குவாடலூப்பை சேர்ந்த 54 வயது பெண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அப்போது ரத்தப் பரிசோதனை செய்யப்பட்ட போது மருத்துவர்களால் இது என்ன வகை என்பதை உறுதி செய்யவே முடியவில்லை. ஒரு புதிய ஆன்டிபாடியை அவரது ரத்தத்தில் கண்டுபிடித்தனர். அந்த நேரத்தில் அதைப் பகுப்பாய்வு செய்யத் தேவையான தொழில்நுட்பம் இல்லை.

இதனால் அப்போது எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. தொழில்நுட்பம் வளர வளர இந்த ரத்தம் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. சுமார் 15 ஆண்டு ஆய்வுக்கு பிறகே இது புதிய வகை ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்தே சர்வதேச ரத்த மாற்றச் சங்கம் இதை புதிய ரத்த வகையாக உறுதி செய்துள்ளது.

ஒருவரிடம் மட்டுமே இருக்கிறது

இப்போது வரை குவாடலூப்பைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு மட்டுமே அந்த வகை ரத்தம் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் தனது தாய் மற்றும் தந்தையிடம் இருந்து மாற்றமடைந்த மரபணுவைப் பெற்றிருக்கிறார். அதாவது அவரது பெற்றோருக்குக் கூட இந்த வகை ரத்தம் இல்லை. எனவே, இப்போது வரை இவரால் உலகில் வேறு யாரிடமும் ரத்தத்தைப் பெற முடியாது. அதேபோல இவருடைய ரத்தத்தையும் வேறு யாருக்கும் கொடுக்க முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+