ஹைதியில் பெண் பலாத்காரம்: சிங்கள ராணுவ வீரர் வெறிச்செயல்
Subscribe to Oneindia Tamil
போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதி தீவில் காரில் வந்த பெண்ணை பாதுகாப்புப் பணியில் இருந்த சிங்கள வீரர் ஒருவர் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதியில் ஐ.நா. படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். இதில் பல உலக நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஐ.நா. படையில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த சிங்கள வீரர், சாலைப் பாதுகாப்புப் பணியில் இருந்த போது, அவ்வழியாக காரில் வந்த பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து அப்பெண் புகார் அளித்துள்ளதாகவும் ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சிங்கள வீரர் குற்றத்தில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications