ஹாலிவுட் நடிகை ஹேலி பெர்ரியிடம் 50 லட்சம் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர் ஒருவர், தன்னை நடிகை ஹேலி பெர்ரியின் கணவர் மார்டினஸ் கடுமையாக தாக்கியதாகக் கூறி அவரிடம் 50 லட்சம் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஹேலி தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பாரிஸ் நகரத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். அப்போது வி.வி.ஐ.பி.,களுக்கான பாதை வழியாக லேக்ஸ் விமானநிலையத்திலிருந்து வெளியே வந்த போது ரொனால்டோ ஓவன்ஸ் எனும் விமான நிலைய ஊழியர் அவர்களை போட்டோ எடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மார்டினஸ் அவரது கையில் வைத்திருந்த குழந்தைகளுக்கான சக்கர இருக்கையைக் கொண்டு பலமாகத் தாக்கி கிழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த ஓவன்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நீதிமன்றத்தில், ஹேலி பெர்ரி மீது ஓவன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் வழக்குத் தொடர்ந்தார். தனது மனுவில், தான் பணியில் இருந்த போது மார்டினஸ் தன்னை கடுமையாகத் தாக்கியதாகவும், ஹேலி மார்டினஸ் கோபத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அவரை தூண்டி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை எனக் கூறி அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், சம்பவம் நடந்து ஒன்பது மாதங்கள் கடந்த பிறகு ஹேலி பெர்ரியிடம் நஷ்ட ஈடாக 50 லட்சம் டாலர் கேட்டு நீதிமன்றத்தில் ஓவன்ஸ் மீண்டும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications