மனிதர்கள் பேய்களாக மாறி குதூகலிக்கும் அமெரிக்காவின் ஹாலோவியன் திருவிழா
வாஷிங்டன்: ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கையில் சற்று மாற்றத்தை உண்டாக்கும் வகையில் வெளிச்சத் திருவிழா என்றுக் கூறப்படும் " ஹாலோவியன்" அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது அமெரிக்காவின் தீபாவளி ஆகும்.
இறந்த பிறகு சொர்க்கத்துக்கும் போகாமல், நரகத்துக்கும் போகாமல் ஆவியாக அலைந்து கொண்டிருப்பவர்களை மகிழ்விக்கும் நன்னாள் தான் இந்த "ஹாலோவியன்".
இதுபோன்ற கெட்ட ஆவிகளை மகிழ்ச்சியடையச் செய்வதன் மூலம் தங்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் நேராது என அமெரிக்கர்கள் நம்புகின்றனர்.

ஹாலோவியன் தோற்றம்
9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாகான் என்றழைக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் துர் மரணமடைந்தவர்கள் (அல்பாயிசுல பூட்ட கேசு ) ஆவியாக அக்டோபர் 31-ம் தேதி வருவதாக நம்பி அந்த நாளை அனைத்து ஆவிகள் தினமாக ( ALL HALLOW'S EVEN) என வழிபட்டனர். ஹாலோவீன் என்பதின் அடையாளச் சின்னமாக பயங்கரமான சூனியக்காரி உருவத்தை வைத்துள்ளனர்.

வாழ்த்து அட்டைகள்
தீபாவளியைப் போலவே ஹாலோவீனுக்கும் வாழ்த்து அட்டைகளிலிருந்து பூங்கொத்துகள், பரிசுக்கூடைகள், ஹாலோவீன் குக்கீஸ், முகமூடிகள் உள்ளிட்டவை அக்டோபர் மாத துவக்கத்திலேயே கடைகளில் வியாபாரம் களைகட்டத் துவங்குகிறது. இது தவிர ஆன் லைன் ஷாப்பிங்கும் பிசியாக நடக்கிறது.

பூசணிக்காய்
சோளக்காட்டு பொம்மை போல எதாவது ஒரு வடிவில் வீட்டுக்கு வீடு பொம்மை இருக்கும். வீடு தவறமல், பூசணிக்காய் உள்ளங்கை அளவிலிருந்து, ஒரு ஆள் கட்டிப் பிடிக்க முடியாத ராட்சச பூசணி அளவு வரை இடம் பெற்றிருக்கும். பூசணியை முகம் போல வெட்டி இரவில் வண்ண விளக்குகள் ஒளிர வைத்திருப்பார்கள்

எலும்புக்கூடு
ஒவ்வொரு வீட்டிலும், முகப்பில் சோபாவில் ஒரு எலும்புக்கூடு ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு புகை பிடித்துக்கொண்டிருக்கும். வீட்டைச் சுற்றியுள்ள மரங்கள் மற்றும் கூரைகளில் மண்டை ஓடுகள், எலும்புகள் என்று தொங்கிக்கொண்டிருக்கும்.

அட இவிங்கெ நம்ம பயபுள்ளைங்க...
பேய்கள் இரவில் உலா வரும்போது இவற்றை எல்லாம் பார்த்து அட இவர்கள் எல்லாம் நம் இனத்தவர்கள் தான் என்று புரிந்துகொண்டு அவர்களை தொந்தரவு ஏதும் செய்யாமல் போய்விடும் என்று ஒரு ஐதீகம். இரவு நேரங்களில் இதை அறியாத பயந்த சுபாவம் உள்ளவர்கள் அந்த வழியே போனால் ‘ மாரடைப்பு' வருவது சாத்தியமாம்.

திகில் ஏற்படுத்தும் பேய்கள்
முகங்களில் கருப்புச் சாயம் பூசி, கண்களைச் சுற்றிக் கலர்கலராக புள்ளி வைத்து, உதட்டுச்சாயம் பூசி, தலைக்கு விக் வைத்துக் கொண்டு ஆண்களும் பெண்களும் பேய், பிசாசுகளாக திடீர் என்று தோன்றி போது இடங்களில் திகில் ஏற்படுத்துவார்கள். இது ஜாலிக்காக செய்தாலும் மின்னல் வேகத்தில் வந்து அந்தப் பகுதியில் திகிலை ஏற்படுத்திச் செல்வார்களாம்.

ஆவிகளோடு டேட்டிங்
ஹாலோவியன் தினத்தில் விதவிதமான வண்ண உடைகளில் இரவுவிடுதிகளில் ஆட்டமும், பாட்டமும் நடத்தி குதூகலாமாய் இருக்கின்றனர். இந்த நாளில் அநேகர் "டேட்டிங்" வைத்துக்கொண்டு கவலையின்றி ஆவிகளோடு ஆவிகளாக உல்லாசமாக இருக்கின்றனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications