திடீர் ட்விஸ்ட்.. ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் தான் இருக்கிறாராம்.. அதிரும் இஸ்ரேல்.. என்ன நடந்தது
டெல் அவிவ்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதாகவே கூறப்பட்டது. இதற்கிடையே திடீர் திருப்பமாக இப்போது சின்வார் உயிருடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையேயான தாக்குதல்கள் இப்போது தீவிரமடைந்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் இது மிக முக்கிய திருப்பமாகப் பார்க்கப்பட்டது. ஹமாஸ் தலைவரே கொல்லப்பட்டால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றெல்லாம் சொன்னார்கள்.
இதற்கிடையே இப்போது திடீர் திருப்பமாக ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் கத்தார் அரசை ரகசியமாக தொடர்பு கொண்டு உதவிகளைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. காசா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலஸ்தீனியர்கள் தங்கிய பள்ளியை இஸ்ரேல் தாக்கியது. அந்த ராக்கெட் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இப்போது அதற்கு நேர்மாறான தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் சின்வார் நேரடி தொடர்பு கொண்டதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று மூத்த கத்தார் தூதர் தெரிவித்துள்ளார். ஹமாஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான நபரான கலீல் அல்-ஹயா என்பவரே தங்களைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். சின்வார் உடனான தொடர்பை இழக்கும் முன்பு அவர் பணயக் கைதிகளுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப். 21ம் தேதி காசாவில் நடந்த தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஏனென்றால் அந்த தாக்குதலுக்குப் பிறகு அவர் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அன்றைய தினம் ஹமாஸ் மையத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. ஆனால், பள்ளியில் தாக்குதல் நடந்ததாகவும் அதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதாகப் பாலஸ்தீனம் கூறுகிறது.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
மாட்டிக்கிட்ட பங்கு.. டிரம்ப்-ன் கழுத்தை நெறிக்கும் ஈரான்.. தேவையில்லாமல் இறங்கிவிட்டோம் புலம்பும் USA!! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications