ஹமாஸ் தீவிரவாதி அமைப்பு இல்லை! இஸ்ரேலுக்கு எதிராக இறங்கிய துருக்கி! இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு
இஸ்ரேல்: இஸ்ரேலுக்கான தனது பயணத்தை ரத்து செய்த துருக்கி அதிபர் தைய்ப் எர்டோகன் ‛‛ஹமாஸ் என்பது தீவிரவாத அமைப்பு இல்லை. ஹமாஸ் என்பது தனது நிலத்தை பாதுகாக்க தேவையான போராட்டத்தை நடத்தி வரும் விடுதலை குழு'' என நாடாளுமன்றத்தில் பரபரப்பாக பேசியுள்ளார். அதுமட்டுமின்றி இஸ்லாமிய நாடுகளுக்கு அவர் அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாதிகள் என அறிவித்துள்ளன.

இந்நிலையில் தான் கடந்த 7 ம் தேதி கடும் மோதல் உருவானது. 'ஹமாஸ்' தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தினர். 20 நிமிடங்களில் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இதுதவிர இஸ்ரேலுக்கு நுழைந்து அவர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். தங்களின் கண்ணில் பட்ட பொதுமக்களை அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதோடு 200க்கும் அதிகமானவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இஸ்ரேலின் கடந்த 75 ஆண்டு கால வரலாற்றில் இது மோசமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து தான் இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கியதாக கூறி காசா மீது உக்கிரமான வான்வெளி தாக்குதலை தொடங்கினார். இந்த தாக்குதல் 3வது வாரமாக தொடர்ந்து வருகிறது. தற்போது வான்வெளி தாக்குதல் நடத்தும் நிலையில் வரும் நாட்களில் காசா நகருக்குள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்தி இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தான் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இஸ்ரேலுக்கான தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்த நிலையில் நாடாளுமன்றத்தில் தனது கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் அவர் இஸ்ரேல்-ஹமாஸ் குறித்து கருத்துகளை முன்வத்தார். அப்போது அவர் கூறியதாவது: மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் உதவிகள் கிடைக்க ரஃபா எல்லையை திறக்க வேண்டும்.
அதோடு இஸ்ரேல், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். ஹமாஸ் என்பது ஒரு தீவிரவாத அமைப்பு இல்லை. ஹமாஸ் என்பது தனது நிலத்தை பாதுகாக்க தேவையான போராட்டத்தை நடத்தி வரும் விடுதலை குழு. இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் சேர்ந்து செயல்பட வேண்டும்.
மேலும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐநாவால் முடியவில்லை. இது ஏமாற்றத்தை அளிக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் பேரை நிறுத்த வல்லரசு நாடுகளை குரல் கொடுக்க செய்யும் வகையில் நிரந்தர அமைதிக்காக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என வருத்தப்பட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications