பக்கா ஸ்கெட்ச்.. வெறும் 1200 பேர் தான்.. படைப்பலமிக்க இஸ்ரேலை கதறவிட்ட ஹமாஸ் படை.. எப்படி தெரியுமா?
காசா: வெறும் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும் கொண்ட காசா எனும் துண்டு நிலத்திலிருந்து, மத்திய கிழக்கின் மிகவும் பாதுகாப்பான நாடு என சொல்லப்படும் இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதல் தற்போது போராக உருவெடுத்திருக்கிறது. இந்நிலையில், இந்த தாக்குதலை எப்படி நடத்தினார்கள் என்பது குறித்து ஹமாஸின் துணை தலைவர் விளக்கியிருக்கிறார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

இந்த பின்னணியில்தான் கடந்த 7ம் தேதி காலை ஹமாஸ், பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள். இவர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது மிக தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கு முன்னர் கூட இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். ஆனால் கடந்த 7ம் தேதி நடந்த தாக்குதலை போன்று தீவிரமாக அவை இருந்ததில்லை. கடந்த காலங்களில் பாலஸ்தீன விடுதலை அமைப்புகளுடன் மோதல் போக்கு இருந்ததால் இஸ்ரேல் உஷாக 'அயர்ன் ட்ரோம்' எனும் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கிக்கொண்டது. இது ஏவுகணை தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கும். ஆனால் அப்படி இருந்தும் கூட ஹமாஸ் அனுப்பிய ஏவுகணைகளை இந்த அயர்ன் ட்ரோம் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. எனவே சில ஏவுகணைகள் இஸ்ரேலை கடுமையாக தாக்கியது.
மறுபுறம் தரைவழியாக ஊடுருவிய ஹமாஸ் படையினர் இஸ்ரேலின் முக்கிய ராணுவ முகாம்களை நொறுக்கி தள்ளினர். வெறும் 25 மைல் நீளமும் 6 மைல் அகலமும் கொண்ட காசா எனும் துண்டு நிலத்தில் இருந்துக்கொண்டு ஹமாஸ் படையினர் எப்படி தாக்குதல் நடத்தினார்கள் என்பது புரியாமல் இஸ்ரேல் கடுப்படைந்தது. உடனடியாக காசா மீது போரை அறிவித்தது. மட்டுமல்லாது இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு நாடுகள் வெளிப்படையாக ஆதரவளித்தன.
இருப்பினும் மறுபுறம் ஹமாஸ் முடிந்த வரை போராடி வருகிறது. இந்நிலையில் கடந்த 7ம் தேதியன்று நடத்திய தாக்குதலுக்கு வெறும் 1,200 பேரைதான் பயன்படுத்தினோம் என ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் சலே அல்-அரூரி கூறியுள்ளார். மேலும் "கொல்வது எங்களது கொள்கைக்கு எதிரானது என்றும், காசாவின் இஸ்ரேலிய ராணுவ தளத்தை அழிப்பதுதான் எங்கள் நோக்கம்" என்றும் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications