காட்டிக் கொடுத்த “பல்”.. ஹமாஸ் தலைவர் சின்வார் உடலை இஸ்ரேல் அடையாளம் காண உதவிய பயோமெட்ரிக் பதிவுகள்!
டெல் அவிவ்: காஸாவில் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டது ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் தான் என்பதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. சின்வாரின் பற்களை ஆய்வு செய்து இதனை கண்டுபிடித்ததாக தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் உடலை அடையாளம் காண இஸ்ரேலுக்கு பல் மருத்துவ பதிவுகள் உதவியதாக தெரியவந்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்த அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் வெளியுறவு அமைச்சரும் இதனை உறுதி செய்துள்ளார்.

ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார், கடந்த ஜூலை மாதம் ஈரானில் நடந்த தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பின்னர் ஹமாஸின் தலைவரானார். சின்வார் 1962 இல் காசா நகரமான கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தவர். அவர் ஹமாஸின் ஆரம்பகாலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து வந்த நிலையில் அண்மைக்காலமாக ஹமாஸ் படைக்கு தலைமை தாங்கினார்.
1980களின் பிற்பகுதியில் இஸ்ரேல் நாட்டில் சின்வார் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் 12 பாலஸ்தீனர்களை கொன்றதாக ஒப்புக்கொண்டார். அதன் காரணமாக சுமார் 22 ஆண்டுகாலம் இஸ்ரேலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2011 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தின் படி சின்வார் விடுவிக்கப்பட்டார்.
1,027 பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய அரேபிய கைதிகள், ஒரே ஒரு இஸ்ரேலிய பணயக்கைதியான இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாட் ஷாலிட் ஆகியோருக்கு ஈடாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் சின்வார். அப்போது எடுக்கப்பட்ட அவரது பயோமெட்ரிக் பதிவுகள் இஸ்ரேல் வசம் உள்ளன. அதன்படி, பல் அமைப்பின் மூலம் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு சின்வார் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீ, விபத்துகள் அல்லது போர் தொடர்பான காயங்கள் காரணமாக உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் பல் அடையாளம் மிகவும் முக்கியமானது. பற்கள், உடலின் மிகவும் வலுவான பாகங்களில் ஒன்றாக இருப்பதால், உடல் கடுமையாக சேதம் அடைந்த நிலைகளிலும் கூட பற்கள் தனித்துவமான அம்சங்களைத் தக்கவைத்துக் கொள்கின்றன.
தடயவியல் பல் வல்லுநர்கள் பொதுவாக எக்ஸ்-கதிர்கள், மருத்துவப் பதிவுகள் மற்றும் பற்களின் கட்டமைப்பை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.பற்களில் ஃபில்லிங்ஸ், ரூட் கேனல் போன்ற தனித்துவமான அடையாளங்கள் ஒருவரின் பற்களில் இருந்தால், இறந்தவரை அடையாளம் காண்பது எளிதானதாக உள்ளது.
இந்நிலையில், நேற்று (அக்டோபர் 17ஆம் தேதி) நடந்த தாக்குதலில் ஹமாஸ் படையைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் என இஸ்ரேல் தெரிவித்தது. சின்வாரின் உடலை அடையாளம் காண பல் மருத்துவ பதிவுகள் இஸ்ரேலுக்கு உதவியதாக தெரியவந்துள்ளது. பல் சரிபார்ப்பு செயல்முறை மிகவும் விரைவாக முடிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர்களின் கூற்றுப்படி, தாக்குதலில் பலியான நபரின் தாடையில் உள்ள பல தனித்துவமான பண்புகள் சின்வாரின் தாடையுடன் ஒத்துப்போகின்றன. முக்கியமாக, 31வது பல் குறிப்பிடத்தக்க வகையில் சாய்ந்துள்ளது. மேலும் சின்வாரின் பல் அமைப்பில் இருக்கும் இடைவெளிகள் இந்த சடலத்தின் குறிப்பிட்ட பற்களுக்கு இடையிலும் இருப்பது கண்டறியப்பட்டு, இறந்தது அவர்தான் என உறுதி செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications