Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உக்கிரமாக தாக்கும் இஸ்ரேல்.. ஐ.எஸ். இயக்கம் போலவே ஹமாஸ் அமைப்பும் ஒடுக்கப்படும்.. நெதன்யாகு ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

அவிவ்: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரை போலவே ஹமாஸ் அமைப்பை நடத்த வேண்டும் என்றும் எந்த ஒரு நாடும் புகலிடம் அளிக்கக்கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள பாலஸ்தீனத்தில் இருந்து கடந்த 1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவானது. அப்போது முதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஹாமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தொடுத்த திடீர் தாக்குதலே இதற்கு காரணம் ஆகும்.

Hamas will be crushed like ISIS says Israel PM Benjamin Netanyahu

ஹமாஸ் அமைப்பினரின் ராக்கெட்டுகள் மழை போல இஸ்ரேல் மீது பொழிந்தன. இந்த தாக்குதலால் நிலைகுலைந்து போன இஸ்ரேல், ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு இப்போது பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் நிலவுகிறது. காசா நகரம் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

6 நாட்கள்: காசாவை முழுவதுமாக முற்றுகையிட்டுள்ளதாக அறிவித்துள்ள இஸ்ரேல், உணவு பொருள், எரிவாயு விநியோகம், மின்சாரம் ஆகியவற்றையும் முடக்கியுள்ளது. இதனால், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அடிப்படைத் தேவைகள் இன்றி கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்கள். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்கி 6 நாட்கள் ஆகியுள்ளது. இந்த போரால் தற்போது வரை இஸ்ரேலில் 1,200 பேரும், காசாவில் 1,100 பேரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றிலுமாக அழிப்போம்: தற்போது, காசா எல்லையைச் சுற்றிலும் இஸ்ரேல் தனது படைகளை குவித்து வைத்துள்ளது. அங்கு பீரங்கி வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஹமாஸ் படையினரை முற்றிலுமாக அழிப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்து இருந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிற்கின்றன. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் சுற்றுப்பயணம் செய்தார்.

விரைவில் நசுக்கப்படும்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு இஸ்ரேல் பிரதமர் கூறியதாவது:- ஹமாஸ் ஐ.எஸ். ஐ.எஸ் போன்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் நசுக்கப்பட்டது போலவே ஹமாஸ் இயக்கமும் விரைவில் நசுக்கப்படும். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரை எப்படி நடத்தினோமோ அதுபோலவே ஹமாஸ் இயக்கத்தினரையும் நடத்த வேண்டும். எந்த ஒரு தலைவரும் ஹமாஸ் அமைப்பினரை சந்திக்கக் கூடாது. யாரும் புகலிடமும் கொடுக்கக் கூடாது" என்றார்.

அமெரிக்கா சப்போர்ட்: மேலும், ஹமாஸ்க்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருக்கும் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். அதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், "இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் அளவுக்கு வலுவான நாடாக உள்ளது. ஆனாலும் அமெரிக்கா எப்போதும் உங்கள் பக்கமே நிற்கும். ஹமாஸ் இயக்கத்தினரின் கொடூரமான தாக்குதலால் அப்பாவி உயிர்கள் பலி போவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களில் 25 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+