காந்தகார், ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாயின் ஒன்று விட்ட சகோதரர் ஹஷ்மத் கர்ஸாய், தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
காந்தகார் அருகே இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அஷ்ரப் கனி என்பவரின் தேர்தல் மேலாளராக செயல்பட்டு வந்தார் ஹஷ்மத் கர்ஸாய்.
சொந்தமாக சிங்கம் ஒன்றை வளர்த்து அதன் மூலம் பிரபலமானவர் ஹஷ்மத் கர்ஸாய். ரம்ஜான் கொண்டாட்டத்திற்காக அவர் வந்தபோது அவருக்கு ஒருவர் டர்பன் அணிவித்தார். அந்த டர்பனுக்குள் வெடிகுண்டுகள நிரப்பி வைத்திருந்தார். டர்பனை அணிவித்ததும் அதை வெடிக்கச் செய்ததில் ஹஷ்மத் கர்ஸாய் கொடூரமாக கொல்லப்பட்டார்.
A suicide attacker killed a cousin of outgoing Afghan President Hamid Karzai near the volatile southern city of Kandahar on Tuesday, officials said, raising tensions during a struggle over the contested election result. Hashmat Karzai was a campaign manager in Kandahar for Ashraf Ghani, one of the two presidential candidates involved in a bitter dispute over fraud that threatens to pitch the country into worsening instability.