அப்படியே இருக்கீங்க பில்... காதலில் கசிந்துருகி "ஹேப்பி பர்த்டே" சொன்ன மெலின்டா கேட்ஸ்
கலிபோர்னியா: 60 வயதைத் தொட்டுள்ள உலகின் மிகப் பெரிய பணக்காரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸுக்கு அவரது மனைவி மெலின்டா கேட்ஸ், காதலுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
"செக்ஸஜெனேரியன் கிளப்"புக்குள் நுழைந்துள்ளார் பில் கேட்ஸ். அக்டோபர் 28ம் தேதி அவருக்கு 60வது பிறந்த நாள். நம்மூராக இருந்திருந்தால் இன்னேரம் இவருக்கு மணி விழா நடத்தி, கருணாநிதி கையால் ஒரு ஷீல்டு கொடுத்து "அண்ணா விருது" கொடுத்திருப்பார்கள். அமீத் ஷா கையால் ஒரு ஜவ்வாது மாலையும் போட்டிருப்பார்கள். சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு வாழ்த்துப் பா பாடியிருப்பார்.
ஆனால் தனது கணவரின் மணி விழா பிறந்த நாளை அழகான நினைவுகளுடன் பேஸ்புக்கில் சிம்பிளாக வாழ்த்தியுள்ளார் அவரது காதல் மனைவி மெலின்டா.

மனைவி ஸ்பெஷலாச்சே
எத்தனையோ பேர் வாழ்த்தினாலும் ஒரு கணவருக்கு மனைவிதானே ஸ்பெஷல். அந்த வகையில், மெலின்டாவின் வாழ்த்துதான் அனைவரையும் கவர்ந்துள்ளது.

முதல் சந்திப்பு
இந்த வாழ்த்துச் செய்தியில் தானும், பில்லும் முதல் முறையாக சந்தித்துக் கொண்ட அந்த முதல் சந்திப்பை நினைவு கூர்ந்துள்ளார் மெலின்டா. அந்த முதல் சந்திப்புக்கு முன்பு தானும் பில்லும் பேசிக் கொண்டதை சுவாரஸ்யமாக நினைவு கூர்ந்துள்ளார் மெலின்டா.

20 வருட தாம்பத்தியம்
அந்த செய்தியின் இறுதியில், 20 வருட அற்புதமான இணைந்த வாழ்க்கைக்குப் பிறகும் உங்களது நகைச்சுவை, புத்திசாலித்தனம், ஆர்வம், சிந்தனை, நம்பிக்கை எல்லாமே இன்னும் அற்புதமாக இருக்கிறது.

நீரிலும் நிலத்திலும்.. இடையிலும்
நீரிலும் நிலத்திலும், அதற்கு இடைப்பட்ட இடங்களிலும் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். அதற்காக நன்றி பில்.. ஹேப்பி ஹேப்பி பர்த்டே என்று வாழ்த்தியுள்ளார் மெலின்டா.
அழகு!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications