Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளவரசர் ஹாரி- மேகனை துரத்திய கார்கள்.. கண் முன் நிழலாடும் 1997ஆம் ஆண்டு நடந்த டயானா கார் விபத்து

Subscribe to Oneindia Tamil

பிரிட்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அமெரிக்காவில் புகைப்படக்காரர்களாால் காரில் துரத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது மகன் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். அரசப் பணிகளை கவனித்து வந்த மன்னர் மூன்றாம் சார்லஸ் கடந்த 6-ம் தேதி முறைப்படி முடிசூடிக் கொண்டார்.

Harry and Meghans car chase reminds Princess Dianas car crash

மன்னர் சார்லஸை தொடர்ந்து அவரது மனைவி கமீலாவும் இங்கிலாந்து ராணியாக முடி சூடிக் கொண்டார். இந்த நிகழ்வில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மன்னர் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர். மன்னர் சார்லஸின் மூத்த மகன் வில்லியம் தனது மனைவி கேத் மிடில்டன், குழந்தைகளுடன் இந்த விழாவில் கலந்து கொண்டார். ஆனால் ஹாரி அரண்மனையிலிருந்து வெளியேறிவிட்டார். இதனால் அவருக்கும் அரசு பரம்பரைக்கும் இருக்கும் பந்தம் அறுந்துவிட்டது.

இந்த நிலையில் சார்லஸின் முடிசூட்டு விழாவில் ஹாரி மட்டும் பங்கேற்றார். ஆனால் அவருடைய மனைவி மேகன் உள்பட குழந்தைகள் யாரும் பங்கேற்ற அனுமதி இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் தங்கியுள்ள மேகனுக்கும் ஹாரிக்கும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

Harry and Meghans car chase reminds Princess Dianas car crash

நியூயார்க் நகரில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் இளவரசர் ஹாரியின் மனைவியும் நடிகையுமான மேகன் மார்க்கெல்லுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹாரி, மேகன், மேகனின் தாயார் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் 3 பேரும் ஒரே காரில் தங்களின் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர்.

அப்போது இளவரசர் ஹாரியையும் அவரது மனைவி மேகனையும் போட்டோ எடுக்க திரண்ட புகைப்படக்காரர்கள் அவர்களை 10 க்கும் மேற்பட்ட கார்களில் விரட்டியுள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக புகைப்படக்காரர்கள் இளவரசர் ஹாரி சென்ற காரை துரத்தியுள்ளனர். இந்த கார் சேஸில் பல விபத்துகள் நடந்துள்ளன. இதில் ஏராளமான கார்கள் சேதமடைந்துள்ளன.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என நியூயார்க் நகர போலீஸார் தெரிவித்தனர். 1997 ஆம் ஆண்டு இளவரசி டயானாவின் உயிரை பறித்த சம்பவத்தை நினைவுப்படுத்தியுள்ளது. டயானா தனது பாதுகாவலர்களுடன் காரில் சென்ற போது அவரை புகைப்படம் எடுக்க புகைப்படக்காரர்கள் துரத்தியதால் பாரீஸில் அவரது கார் விபத்துக்குள்ளானது.

Harry and Meghans car chase reminds Princess Dianas car crash

இதில் வேல்ஸ் இளவரசி டயானா அகால மரணமடைந்தார். டோடி ஃபயீத் என்ற எகிப்து திரைப்பட தயாரிப்பாளரும் இந்த விபத்தில் மரணமடைந்தார். டயானாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பிருந்ததாகவும் அவருடன் டயானா வெளியே செல்கிறார் என்றதும் அவரை படம்பிடித்த புகைப்படக்காரர்கள் முடிவு செய்தனர். இதற்காக எப்படியாவது துரத்தி அந்த நபரை புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் இந்த முயற்சியில் போனது இரு உயிர்கள் என சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. டயானாவின் கார் விபத்தில் சிக்கிய போது அவர் உயிருடன் இருந்ததாகவும் அவரை காரில் இருந்து வெளியே தூக்கிய நபர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்ததாகவும் அப்போது 20 வினாடிகளில் அவருக்கு நினைவுத் திரும்பியதாவும் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+