ஆம், இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தவே அணு ஆயுத தயாரிப்பு... முதன்முறையாக ஒப்புக் கொண்டது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்தவே அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டதாக முதன்முறையாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.
தீவிரவாத ஒழிப்புக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கும் நிதியை அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்துவதாக பாகிஸ்தான் மீது சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அந்நாடு அணு ஆயுத குவிப்பில் ஈடுபட்டு வருவதை, அந்நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் அஜீஸ் சவுத்ரி ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் வரும் 22-ம் தேதி பராக் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். அப்போது அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பாகிஸ்தானை ஒபாமா வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நவாஸ் ஷெரீப் அணு ஆயுதத்திற்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்ற தகவலை அஜீஸ் சவுத்ரி மறுத்துள்ளார்.
அதோடு தங்கள் நாட்டின் அணு ஆயுத தயாரிப்பு தற்காப்பிற்காகவே என்று விளக்கம் அளித்துள்ள அஜீஸ், இந்தியாவுடன் போர் புரியும் சூழல் ஏற்பட்டால், அதற்கென்றே சிறப்பு அணு ஆயுதங்களை, தங்கள் நாடு தயாரித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications