மீண்டும் வெடித்த எரிமலை.. ஹவாயை மிரட்டும் தீக்குழம்பு.. ஊருக்குள் வந்த லாவா
அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் உள்ள எரிமலை தற்போது மீண்டும் வெடித்துள்ளது.
Recommended Video

ஹவாய்: அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் உள்ள எரிமலை தற்போது மீண்டும் வெடித்துள்ளது. ஒரு வாரம் முன்பு முதல் முறையாக வெடித்த எரிமலை தற்போது மீண்டும் லாவா குழம்புகளை கக்கிக் கொண்டு வருகிறது.
இது மொத்தமாக வெடித்த காரணத்தால் மக்கள் அவர்கள் இருந்த பகுதியைவிட்டு வெளியேறினார்கள். இதற்காக அமெரிக்க அரசு மீட்பு படையை அனுப்பி இருந்தது.
மக்கள் வசிப்பிடத்தை நோக்கி இந்த எரிமலை குழம்புகள் வரும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் சில மக்கள் ஏற்கனவே அவர்கள் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார்கள். இதிலிருந்து தற்போது லாவாக்கள் வெடித்து வெளியே வந்துள்ளது.

என்ன வரலாறு
1975ல் இருந்தே இந்த தீவில் எரிமலை வெடிக்கும் நிலையில் இருந்தது. முக்கியமாக கிலாயூ என்ற எரிமலைதான் அதிக வீரியத்துடன் காணப்பட்டது. தற்போது இந்த எரிமலைதான் வெடித்துள்ளது. ஹவாய் தீவில் மிகவும் தீவிரமான நிலையில் வெடிக்கக்கூடிய வகையில் பல எரிமலைகள் இருக்கிறது. அந்த வகையில் கிலாயூ எரிமலை ஒரு வாரம் முன்பு வெடித்தது. மிகவும் மோசமான நிலையில் நெருப்பு குழம்புகளை கக்கிக் கொண்டு இருக்கிறது.
|
எவ்வளவு வெப்பம்
இந்த எரிமலையில் இருந்து வரும் லாவா குழம்புகள் மொத்தம் 1,093 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக கடந்த ஒரு வாரமாக குடியிருப்பு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இது அந்த நாட்டின் மொத்த இயற்கை சூழ்நிலையையே மாற்றிவிட்டதாக, அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இதனால்
எரிமலை வெடிப்பு காரணமாகவே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு இருந்து முக்கால்வாசி கட்டிடங்கள் இதனால் பாதிக்கப்பட்டது. 100 க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. 2500 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் பலர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் மீட்புபணி செய்ய முடியாததால், இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக வெளியிட முடியவில்லை.

நிலநடுக்கம்
இத்தனைக்கும் மத்தியில் அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் சரியாக 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் வீடுகளை காலி செய்து கொண்டு இருந்த மக்கள் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகினர்.இரண்டாவது நிலநடுக்கம் சரியாக 7.4 ரிக்டர் அளவில் பதிவானது. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications