அம்மா நான் சாகப் போறேன்: ஆர்லான்டோ கிளப்பில் இருந்து தாய்க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய நபர்
ஆர்லான்டோ: ஆர்லான்டோ ஓரினச்சேர்க்கையாளர் கிளப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான எட்டி ஜஸ்டிஸ் என்பவர் இறக்கும் முன்பு தனது தாய்க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லான்டோ நகரில் இருக்கும் பல்ஸ் என்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் கிளப்புக்குள் புகுந்த உமர் மாட்டீன்(29) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியாகினர், 50 பேர் காயம் அடைந்தனர்.

இரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடந்த இந்த சம்பவத்தில் 30 வயதான எட்டி ஜஸ்டிஸ்(Eddie Justice) என்பவரும் பலியாகியுள்ளார்.
உமர் கிளப்புக்குள் நுழைந்தவுடன் கழிவறையில் தஞ்சம் அடைந்த எட்டி 2.06 மணிக்கு தனது தாய்க்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். கிளப்பில் உள்ளேன், துப்பாக்கிச்சூடு நடக்கிறது என்று அதில் தெரிவித்துள்ளார்.
அரை தூக்கத்தில் இருந்த அவரின் தாய் மினா ஜஸ்டிஸ், நீ பத்திரமாக இருக்கிறாயா என்று எஸ்.எம்.எஸ். மூலம் கேட்க அவரோ கழிவறையில் உள்ளேன். தயவு செய்து போலீசாருக்கு தகவல் அளியுங்கள். அந்த நபர் துப்பாக்கியுடன் கழிவறைக்குள் வந்துவிட்டார். நான் சாகப் போகிறேன் என்று பதில் அனுப்பியுள்ளார்.
அந்த நபர் டெரராக உள்ளார். போலீசாரை வந்து எங்களை மீட்கச் சொல்லுங்கள் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார் எட்டி. மினா போலீசாருக்கு தகவல் அளித்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்கள் பட்டியலில் எட்டியின் பெயரும் இருந்ததை பார்த்து மினா அதிர்ச்சி அடைந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications