காதுக்குள் நிகழ்ந்த விசித்திரம்! ஆண் குரல்கள் மட்டும் கேட்காமல் போன மர்மம்! அலறிய டாக்டர்கள்
பீஜிங்: ஆண்களின் குரலை மட்டும் கேட்க முடியாத விசித்திரமான நோய் பாதிப்பு சீனாவில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.. மர்மமான இந்த மருத்துவ பாதிப்பு குறித்து மருத்துவர்கள் அளித்த விளக்கம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.. தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தால் நேர்ந்த இந்த அரிய வகை செவித்திறன் குறைபாடு குறித்த முழு விவரங்களை இங்கே சுருக்கமாக காணலாம்..
சீனாவின் சியாமென் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்குத் திடீரென ஏற்பட்ட விசித்திரமான மருத்துவ பாதிப்பு உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆண்கள் பேசுவது கேட்கல
ஒரு நாள் இரவு தூங்கச் சென்ற அந்தப் பெண், அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது தன் காதலன் பேசுவது மட்டும் சற்றும் கேட்காமல் போனதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.. அந்தப் பெண்ணுக்குத் திடீரென ஏற்பட்ட இந்த அரிய செவித்திறன் குறைபாடு அதாவது "Reverse Slope Hearing Loss" என மருத்துவ ரீதியாக அறியப்படுகிறது.
அதாவது குறைந்த அதிர்வெண் கொண்ட சத்தங்கள் பாதிக்கப்படுகிறதாம். அதனால் ஆண்களின் குரல் சரியாக கேட்கவில்லையாம்.. காதலன் பேசுவதும் காதில் கேட்கவில்லை, எந்த ஆண்கள் பேசுவதும் காதில் விழாததால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.. அங்கிருந்த நர்ஸ்கள் பேசியது மட்டும் அவருக்குத் தெளிவாகக் கேட்டுள்ளது. அங்கிருந்த ஆண்கள் பேசியது அந்த பெண்ணுக்கு கேட்கவில்லையாம்.
சீனப் பெண் அதிர்ச்சி
மருத்துவ பரிசோதனைகளில் இது ஒரு அரிய வகை "low-frequency hearing loss" என உறுதி செய்யப்பட்டது.. அதாவது low pitch sounds கேட்க கடினமாகிறது.. அதே சமயம் பெண்களின் குரல் போன்ற high frequency sounds அவரால் தெளிவாகக் கேட்க முடிகிறது.. இதன் காரணம் முழுமையாகத் தெளிவாக இல்லாவிட்டாலும், சில சந்தர்ப்பங்களில் அதிகப்படியான வேலைப்பளு, தூக்கமின்மை அல்லது மன அழுத்தம் மற்றும் inner ear தொடர்பான பிரச்சனைகள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண் முந்தைய நாள் இரவு தூங்குவதற்கு முன்பே காதில் ஒருவித இரைச்சல் மற்றும் வாந்தி உணர்வைச் சந்தித்துள்ளார்.. உடலில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்கள் மற்றும் அதீத சோர்வு அவரது செவித்திறனைப் பாதித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது..
ரிவர்ஸ் ஸ்லோப் பிரச்சனை
மிகவும் அரிதான ஒரு பாதிப்பாக கருதப்படும் பிரச்சனைக்கு 'ரிவர்ஸ் ஸ்லோப்' நிலை என்கிறார்கள்.. இதற்கு காரணம், Audiogram சோதனையில், அதன் தோற்றமே வழக்கத்திற்கு மாறாக தலைகீழாக தென்படுமாம். அதனால்தான் இந்த பெயர் வந்ததாக மருத்துவ துறையில் சொல்கிறார்கள்.
பொதுவாக மனிதர்களுக்குக் காது கேட்கும் திறன் குறையும்போது அதிக அதிர்வெண் கொண்ட சத்தங்களே முதலில் கேட்காமல் போகும்.. ஆனால் அந்தப் பெண்ணுக்கு நேர்மாறாகக் குறைந்த அதிர்வெண் கொண்ட சத்தங்கள் மட்டும் கேட்காமல் போயுள்ளன.. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இது மிகவும் அரிதான செவித்திறன் பாதிப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது..
டாக்டர்கள் சொல்வதென்ன
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடி சத்தம், மேளச் சத்தம் அல்லது ஆண்களின் கனமான குரல் போன்ற குறைந்த அதிர்வெண் ஒலிகள் கேட்காது.. இப்போது அந்தப் பெண்ணுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.. அவருக்குத் தேவையான முறையான ஓய்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் சிகிச்சைகளை டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
முறையான சிகிச்சைக்குப் பிறகு அவரது செவித்திறனில் முன்னேற்றம் காணலாம் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.. ஒரு குறிப்பிட்ட வகை ஒலிகளை மட்டும் கேட்க முடியாமல் போன இந்தச் சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது..!!












Click it and Unblock the Notifications