Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குலை நடுங்குதே.. தோண்ட தோண்ட பிணங்கள்.. செதில் செதிலா உரிந்த தோல்கள்.. பட்டினி போட்டே கொன்ற சைக்கோ

தண்ணீர், சாப்பாடு எதுவுமே தராமல் பட்டினி போட்டே நாய்களை கொன்றுள்ளார் சைக்கோ நபர் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

சியோல்: தென்கொரியாவின் சம்பவ அதிர்ச்சி இன்னமும் விலகாத நிலையில், அது தொடர்பான மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. நாய்களை கொன்ற சைக்கோ நபர் கைதாகி உள்ளார். அவரிடம் விசாரணையும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

மனிதர்களுக்கு செல்லம் என்றாலே அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள்தான்.. பலரின் குடும்பத்தில் இந்த பிராணிகள் ஒரு முக்கிய உறுப்பினராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

எத்தனையோ குடும்பங்களின் இறுக்கமான சூழல்களை, இதுபோன்ற நாய், பூனை, முயல் போன்ற பிராணிகள் மகிழ்ச்சியாக மாற்றுகின்றன.

 கரையும் அன்பு

கரையும் அன்பு

பலமடங்கு புத்துணர்ச்சியை வாரி வழங்குகின்றன.. நம்மிடம் இந்த உயிரினங்கள் காட்டும் பாசமும், அன்பும், விசுவாசமும் எந்தவித நிபந்தனையுமற்றது.. அதேசமயம், இந்த பிராணிகளுக்கும் உணர்வுகள் உண்டு.. கோபம், மகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், வெறித்தனம், என அத்தனை உணர்வுகளும் உண்டு.. தன்னை வளர்க்கும் ஓனர்களிடம் உரிமையாக கோபப்பட்டுக் கொள்ளும்.. ஆனா, அடுத்த நிமிடமே, உற்சாகமாகத்தில் ஓடிவந்து நெருங்கி நின்று நேசத்தை கொட்டிச்செல்லும்... இந்த அன்பில் கரைந்து காணாமல் போனவர்கள் லட்சக்கணக்கில் உலகம் முழுவதும் சிதறுண்டு கிடக்கிறார்கள். ஆனால், உயிரிழனங்களை சித்ரவதை செய்யும் மிக கொடூரர்களும், நம்முடனேயே வாழ்ந்து வருவது வேதனையை தந்து வருகிறது..

 செல்ல நாய்

செல்ல நாய்

அதிலும் கடந்த 2 நாட்களாகவே தென்காரியாவின் வடமேற்கு மாகாணத்தில் நடந்த ஒரு சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. அங்கே ஒரே ஒரு வீட்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடந்துள்ளன.. ஜியோங்கி மாகாணத்தில் உள்ள யாங்பியோங் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த பகுதியில் ஒருவர் நாயை வளர்த்து வந்திருக்கிறார். அந்த செல்ல நாய் திடீரென மாயமாகிவிட்டது.. அந்த நாய் அதே பகுதியில் வேறு எங்கோ இருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஒவ்வொரு பகுதியாக தேடியுள்ளார்.. அப்படி தேடி வந்தபோது, இந்த வீட்டை கண்டுபிடித்துள்ளனர்...

 அலறி ஓட்டம்

அலறி ஓட்டம்

எப்படியும் அந்த வீட்டிற்குள் நாய் இருக்கலாம் என்ற கணிப்பில் அந்த நபர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.. அங்கே ஏகப்பட்ட நாய்களின் சடலங்கள் கிடந்துள்ளன.. முதலில் அவருக்கு இந்த சடலங்களை பார்த்ததுமே எதுவுமே புரியவில்லை.. என்ன நடந்திருக்கலாம் என்றும் யூகிக்க முடியவில்லை.. அதனால், அங்கிருந்து அலறியடித்து கொண்டே போலீசுக்கு ஓடினார். இதற்கு பிறகு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்துகிடந்துள்ளன.. மிக கொடூரமாக அவை கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.

கொலைபட்டினி

கொலைபட்டினி

அதற்கு பிறகு, அந்த நாய்களை பலநாட்கள் பட்டினி போட்டே கொன்றிருக்கலாம் என்ற அடுத்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வீட்டின் உரிமையாளருக்கு 60 வயதாகிறதாம்.. அவர்தான் இப்படி ஒரு கொடூரத்தை அரங்கேற்றியிருக்க முடியும் என்கிறார்கள். அதிலும் அந்த நபர் சைகோ என்ற அடுத்த தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது, கைவிடப்பட்ட நாய்கள் எங்கெங்கு உள்ளதோ அவைகளை மீட்டு வீட்டுக்கு கொண்டு வருவாராம் இந்த சைக்கோ நபர்.. அதற்கு பிறகு, பட்டினி போட்டே அவைகளை கொன்றுள்ளார்..

 சைக்கோ பேர்வழி

சைக்கோ பேர்வழி

இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் சொல்லும்போது, "நாய்களை வைத்து நிறைய பேர் லாபம் சம்பாதிக்கிறார்கள்.. ஒருகட்டத்தில் அந்த நாய்களுக்கு வயதாகிவிட்டால், வருமானம் வராது.. அதனால்தான் இவைகளை எங்காவது விற்கவோ, அல்லது கொலை செய்துவிடவோ முயல்கிறார்கள்.. அந்தவகையில், சம்பந்தப்பட்ட சைக்கோ நபரிடம் கொண்டுவந்து பலரும் இப்படியான நாய்களை தந்துவிட்டு போயிருக்கலாம்.. அவரும் அந்த நாய்களை பட்டினி போட்டே கொன்றிருக்கலாம்.. இப்படியான காரியத்தை செய்வதற்கு ஒவ்வொரு நாய்க்கும் 7.7 அமெரிக்க டாலர்கள் பணமும் தரப்படுகிறது" என்கிறார்கள்.

 பிய்ந்த சதைகள்

பிய்ந்த சதைகள்

இந்த வீட்டை பார்த்தால், கிட்டத்தட்ட 2 வருடத்துக்கும் மேல் நாய்களுக்கு அவர் சாப்பாடு போடாமல் இருந்திருக்கலாம் என்கிறார்கள்.. நாய்களை வெளியில் விட்டால் அவைகள் எங்காவது உணவை தேடி சாப்பிட்டுவிடும் என்பதால், தனி அறையில் பூட்டி வைத்து பட்டினியால் கொன்றதாக தெரிகிறது இந்த நாய்களுக்காக சம்பந்தப்பட்ட நபர் நிறைய கூண்டுகளை, சாக்குகளை, பெட்டிகளை வாங்கிவைத்துள்ளார்.. ஒவ்வொரு பெட்டியையும் திறந்து பார்த்தால் நாய் சடலங்கள்தான் காணப்படுகிறதாம்.. அதாவது நாய்களின் சடலங்களை வரிசையாக போட்டு, அதற்கு மேல் இன்னொரு வரிசையில் நாய்களின் சடலங்கள், அதற்குமேல் இன்னொரு வரிசை என அடுக்கடுக்காக பிணங்களை அடுக்கி வைத்துள்ளார்..

 அட்டை பெட்டிகள்

அட்டை பெட்டிகள்

ஆயிரக்கணக்கான நாய் சடலங்களுக்கு இடையில், வெறும் 4 நாய்கள் மட்டும் குற்றியிரும் குலையிருமாக இருந்திருக்கின்றன.. அவைகளை மட்டும் போலீசார் மீட்டுள்ளனர்.. இந்த நபர் நிச்சயம் சைக்கோவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.. காரணம், நாய்களை பட்டினி போட்டு கொன்றதுடன், அதன் சடலங்களையும் தூக்கி வீசாமல் இருந்துள்ளார்.. அங்கிருந்த கூண்டுகளில் நிறைய நாய்கள் அழுகி கிடந்தனவாம்.. பல நாய்கள் அழுகிப்போய் மக்கி போயி தரையிலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறது.. மேலும் சில நாய்களின் சதைகள், அந்த கூண்டுகளின் கம்பிகளி ஒட்டிக்கொண்டிருக்கின்றனவாட்.. தண்ணீர்கூட அந்த நாய்களுக்கு தராமல் இருந்துள்ளார்..

 கோணிப்பைகள்

கோணிப்பைகள்

இதனால் நோய்களும் அந்த நாய்களுக்கு வந்துள்ளன.. அதேபோல, "நாய்கள் பராமரிப்பு இல்லம்" என்கிற பெயரிலேயே பராமரிப்பு தொகையையும் ஓனர்களிடம் வாங்கிக்கொண்டு வந்து அதற்கு பிறகே கொலை செய்திருப்பதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.. மீட்கப்பட்ட நாய்கள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவைகளின் உயிர்களும் ஊசலாடி கொண்டிருக்கிறதாம். ரப்பர் பெட்டிகளில் உள்ள நாய்களின் உடல்கள் முழுவதும் அகற்றுவதற்கு ஒரு வார காலம் ஆகும் என்கிறார்கள்.. இப்போது அந்த சைக்கோ நபர் சிக்கி உள்ளார்..

 பட்டினி கொலை

பட்டினி கொலை

இது குறித்து அவரிடம் விசாரித்த போது, நாய்களை எடுத்து சென்று பட்டினி போட்டுக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இவருக்கு கடுமையான தண்டனையை தர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.. பொதுவாக, தென்கொரியா நாட்டில் விலங்குகள் பாதுகாப்பு சட்டங்கள் அமலில் உள்ளது. அங்கு, விலங்குகளுக்கு உணவு அளிக்காமலிருந்தாலோ, கொலை செய்தாலோ 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் அல்லது 30 மில்லியன் அபராதம் விதிக்கப்படும்.. அந்தவகையில் சைக்கோ நபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றாலும், விலங்குகளை துன்புறுத்தும் போக்கு இனியாவது குறைய வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+