பார்ட்டியில் "கட்டிப்பிடித்து" ஜாலி.. "குழிக்குள்ளே" தோழிகளா.. திடீர்னு நடந்த அந்த சம்பவம்.. எப்படி
7 தோழிகளும் கட்டிப்பிடித்து கொண்டு குழியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை கூட்டி வருகிறது
பிரஸ்ஸிலியா: கட்டிப்பிடித்துக் கொண்டு, ஜாலியாக, தோழிகள் டான்ஸ் ஆடி கொண்டிருந்தார்கள்.. அப்போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
உலகிலேயே அதிக அளவு நிலநடுக்கம் ஜப்பானில் ஏற்படுவது வழக்கம்.. எனினும், இங்கு அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கத்தை எதிர்கொண்டு வாழ, அங்குள்ள மக்கள் பழகி விட்டனர்.
மேலும், ஜப்பானில் உள்ள கட்டிடங்கள் வலுவான நடுக்கத்தை தாங்குவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான கட்டுமான விதிமுறைகளை கொண்டுள்ளது. அப்படி இருந்தும் சக்திவாய்ந்த பூகம்பங்கள் அங்கு ஏற்பட்டு வருவதை தவிர்க்க முடிவதில்லை.

வைப்ரேஷன்
அதேபோல, தென் அமெரிக்கா கண்டத்தில் பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள பெரு - பிரேசில் நாடுகளின் எல்லையிலும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.. தென் அமெரிக்கா கண்டத்தில் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள பெரு உள்ளிட்ட நாடுகள் அடிக்கடி நிலநடுக்கத்துக்கு இலக்காகி வருகின்றன.. பெரு, பிரேபில் உள்ளிட்ட நாடுகளில், ஒரு சின்ன அதிர்வு ஏற்பட்டாலும்கூட, விழிப்புடன் இருக்கிறார்கள்.. வீட்டிற்குள்ளிருந்து அலறி அடித்து தெருவுக்கு வந்து தஞ்சம் அடைவது போன்ற சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஜாலி + பார்ட்டி
அந்தவகையில், பிரேசில் நாட்டின் அலோகோயின்ஹாஸ் நகரில், கடந்த செப்டம்பர் 24ம் தேதி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இது தற்போதுதான் இணையத்தில் வீடியோவாகவும் வலம் வர துவங்கி உள்ளது.. அந்த பகுதியில் வசித்து வருபவர் கேப்ரிலா கார்வல்ஹோ என்ற பெண்.. இவருக்கு 38 வயதாகிறது.. செப்டம்பர் 24ம் தேதி இவருக்கு பிறந்தநாள் வந்துள்ளது.. தன் நண்பர்களுக்கு பார்ட்டி தருவதற்காக, வீட்டிற்கு அனைவரையும் அழைத்துள்ளார்.. வீடு முழுக்க நண்பர்கள் சூழ்ந்திருந்தனர்.. ஆட்டம் பாட்டம் என அசத்தியிருக்கிறார்கள்..

கட்டிப்பிடித்து டான்ஸ்
தோழிகள் 7 பேரும் சுற்றி நின்று கொண்டு, வட்டமிட்டு அணைத்துக்கொண்டு டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.. அது ஒரு போர்த்துகீசிய புகழ்பெற்ற பாடலாம்.. அதற்கு 7 பேரும் கட்டிப்பிடித்து கொண்டு, டான்ஸ் ஆடியுள்ளனர். அப்போது அவர்கள் கீழ் இருந்த தரையில், திடீரென பள்ளம் உருவாகிவிட்டது.. அதில் 7 பேருமே தொப்பென்று தவறி பள்ளத்திற்குள் விழுந்துவிட்டனர்.. இந்த பள்ளம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.. இவர்கள் ஆடும் டான்ஸை ஆரம்பத்தில் இருந்தே வீடியோ எடுத்து கொண்டிருந்தவர் கேமிராவில் இந்த காட்சியும் பதிந்துவிட்டது.

குழி + பள்ளம்
அந்த வீட்டில் இவர்கள் நின்றிருந்த இடத்தில் மட்டும்தான் திடீரென அதிர்வு ஏற்பட்டு பள்ளம் விழுந்துள்ளது.. இவர்கள் 7 பேரும் ஒருவரையொருவர் தாங்கி பிடித்து, எழ முயற்சித்தும் முடியவில்லை.. பிறகு, மற்ற நண்பர்கள் அவர்களை பாதுகாப்பாக மீட்டுவிட்டனர்.. இதையடுத்து, இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் பறந்து, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.. இந்த வீடு, முன்பு ஒருமுறை அங்கிருந்த வடிகால் அமைப்புக்காக தோண்டப்பட்ட குழியாம்..

வெலவெலப்பு
அதன் மேல் போடப்பட்ட தளம் பலவீனமாக இருந்ததால், இந்த விபத்து நடந்ததாக சொல்கிறார்கள்.. இந்த குழியை உடனடியாக ஊழியர்கள் சீரமைத்துவிட்டனர் என்றாலும், அந்த பகுதி மக்களுக்கு பீதி தொற்றி கொண்டுள்ளது.. தோழிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த நேரத்தில், பூமி பிளந்து கொண்டு, குழிக்குள் விழுந்த சம்பவம் வீடியோவாக பரவி, காண்போரை வெலவெலக்க வைத்து வருகிறது...!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications