Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நெகிழ்ச்சி.." இறந்த மகனின் கருவை வாடகை தாயாக வயிற்றில் சுமந்து.. "வம்சத்தை வாழ வைத்த" பிரபல நடிகை!

Subscribe to Oneindia Tamil

மாட்ரிட்: பிரபல நடிகை ஒருவர், பெண் குழந்தையை தத்தெடுத்துள்ள விவகாரம், புயலை கிளப்பி உள்ளது.. ஒருபக்கம் எதிர்ப்புகள் கிளம்பினாலும், இணையவாசிகள் திரண்டு வந்து இந்த நடிகைக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்? யார் இவர்?

பொதுவாக சினிமா உலகை பொறுத்தவரை, குழந்தை தத்தெடுப்பு என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.. குழந்தைகளை தத்தெடுப்பதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன.

திருமணத்தில் விருப்பமில்லாதவர்கள், அல்லது தனக்கு இறுதிவரை ஒரு துணை வேண்டும் என்று நினைப்பவர்கள், அல்லது சொத்து, வாரிசு பிரச்சனை உள்ளவர்கள் என எத்தனையோ காரணங்களுக்காக குழந்தையை தத்தெடுக்கிறார்கள்.. சில நேரங்களில் சட்டசிக்கலை உண்டுபண்ணினாலும், இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட உரிமையும், விருப்பமும்கூட.

சன்னிலியோன்: இதாவது பரவாயில்லை,, சமீபத்தில் சன்னி லியோன் ஒருமுறை செய்தியாளர்களுக்கு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, "குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கிறது.. ஆனால் சினிமாவில் ரொம்ப பிஸியாக இருப்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள டைம் கிடைக்கவில்லை.. கர்ப்பமாகிவிட்டால் சினிமாவில் நடிப்பது பாதிக்கும்.. அதனால் தத்தெடுக்க விரும்புகிறேன்.. திடீர்னு ஒரு நாள் கையில் குழந்தையுடன் வந்து நின்று ஆச்சரியப்படுத்துவேன்" என்று சொன்னதுடன், அதுபோலவே, ஒன்றே முக்கால் வயது குழந்தையை தத்தெடுத்து அறிவித்தார்..

Hearttouching news and spain tv star ana obregon reveals surrogate baby conceived with dead son frozen sperm

மகள் அல்ல பேத்தி: நம்ம ஊரில், அப்படி தத்தெடுப்பு என்ற சொல்லை கேட்டாலே முதலில் மனதில் வரும் பெயர் சுஷ்மிதா சென்... பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து கொண்டிருக்கிறார். இதற்காக, சுஷ்மிதா சந்தித்த ஏகப்பட்ட சிக்கல்களை நாம் நேரடியாகவே பார்த்துள்ளோம்.. அந்தவகையில், தத்தெடுப்பு விவகாரத்தில் தற்போது ஒரு நடிகை பரபரப்பை கூட்டி உள்ளதுடன், மொத்த பேரையும் அதிர வைத்துள்ளார்.. அவர் ஒரு ஸ்பெயின் நாட்டு நடிகை ஆவார்.. பெயர் அனா ஒப்ரகன். இவர் சமீபத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தையை தத்தெடுத்தார். அந்த குழந்தைக்கு அனா சாண்ட்ரா என்று பெயரையும் வைத்தார்.. "இது என் மகள் அல்ல.. பேத்தி" என்று பூரிக்கிறார் ஒப்ரகன்.

வாடகை தாய்: இந்த குழந்தை புளோரிடா மாகாணத்தின் மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டு பெண்ணுக்கு பிறந்த குழந்தையாகும்... அதாவது அந்த பெண் ஒரு வாடகை தாய் ஆவார்.. அவருக்கு பிறந்த குழந்தையை அனா ஒப்ரகன் தத்தெடுத்து கொண்டார்.. குழந்தையை தத்தெடுத்தது ஒப்ரகனுக்கு பாராட்டை பெற்று தந்தாலும், அவர் அதற்காக தந்த விளக்கம்தான், பெருத்த வியப்பை தந்துள்ளது. காரணம் அந்த குழந்தை, ஒப்ரகனின் மகனின் விந்தணு மூலம் உருவான குழந்தையாம்.. அதாவது, ஒப்ரகனுக்கு இப்போது 68 வயதாகிறது.. இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருந்திருக்கிறார்.. அந்த மகன் பெயர் அலெஸ் லெகியோ.. அவர் கடந்த 2020-ல் புற்றுநோய் தாக்கி இறந்துவிட்டார்.. அப்போது அந்த மகனுக்கு 27 வயது..

Hearttouching news and spain tv star ana obregon reveals surrogate baby conceived with dead son frozen sperm

கடைசி ஆசை: இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தன்னுடைய ஆசையை சொன்னாராம்.. அதனால் அப்போதே அவரது விந்தணுவின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவைகள் உறைந்த நிலையில், நியூயார்க்கில் சேமிக்கப்பட்டு வந்தது.. அந்த விந்தணுவை தொடர்ந்து 3 வருடங்களாக பத்திரப்படுத்திவந்த நிலையில், இப்போது, தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் ஒப்ரகன்..

ஸ்பெஷல் கேர்: எப்போதுமே ஸ்பெயின் நாட்டை பொறுத்தவரை, வன்முறைகளுக்கு மிகப்பெரிய தண்டனைகளை தருவார்கள்.. அதிலும், குடும்ப வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டங்களே அங்கு உண்டு... பாலின சமத்துவத்தை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.. குடும்ப வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களும் அங்கே செயல்படுகின்றன... உதாரணமாக, மனைவிக்கு பொருளாதார வசதி இல்லை என்றாலும், கோர்ட்டுக்கே சென்று அதனை முறையிடலாம்.. அந்த அளவுக்கு பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் மிகவும் முக்கியத்துவம் தந்து பார்க்கப்படும்..

அந்தவகையில், வாடகைத்தாய் விவகாரமும் ஸ்பெயின் நாட்டில் சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது.. ஆனால், வெளிநாட்டில் பிறந்த குழந்தையை தத்தெடுப்பது சட்டபூர்வமானது என்பதால், அமெரிக்காவில் வாடகை தாய் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவர் மூலம் குழந்தை பெற்று, அந்த குழந்தையை ஒப்ரகன் தத்தெடுத்துள்ளார்... இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது.. ஸ்பெயின் நாட்டில், இறந்த மனிதனின் விந்து, கருவூட்டலுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது அது அவர் இறந்த 12 மாதங்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.. ஆனால், இந்த விஷயத்தில் 3 வருடம் விந்தணுவை ஒப்ரகன் பாதுகாத்து வந்திருக்கிறார்..

Hearttouching news and spain tv star ana obregon reveals surrogate baby conceived with dead son frozen sperm

"பெண்களுக்கு எதிரான வன்முறையின் ஒரு வடிவம் இது" என்று ஸ்பெயின் நாட்டு அமைச்சர் ஒருவரும் விமர்சித்துள்ளார்.. இப்படி நடிகையின் தத்தெடுப்பு விவகாரம், பல்வேறு விவாதங்களையும், அலசல்களையும் கிளப்பி விட்டுள்ளது.. ஆனால், ஆயிரம் விதிமுறைகள், சட்டதிட்டங்கள் இருந்தாலும், இறந்த மகனின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, பூட்டப்பட்ட சட்ட விலங்குகளை அடித்து நொறுக்கியுள்ளார் ஒப்ரகன்..தாய்மையின் முன் எது நின்றாலும் அது தூள் தூளாக காணாமல்தானே போகும்... "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+