கென்யாவில் வறட்சி.. எலும்பும் தோலுமாக காணப்படும் வனவிலங்குகள்.. நெஞ்சை வெடிக்க செய்யும் ஒற்றை போட்டோ
நைரோபி: கென்யா நாட்டில் கடும் வறட்சி காரணமாக உயிரியல் பூங்காவில் உள்ள 6 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்துள்ள புகைப்படம் நெஞ்சை பதற வைக்கிறது.
கென்யாவில் இந்த ஆண்டு அதிக மழை பெய்யவில்லை. இதனால் வனப்பகுதிகளிலும் அதிக வறட்சி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக வடக்கு கென்யாவின் வஜீப், அல்ஜசீரா போன்ற பகுதிகளில் செப்டம்பர் மாதம் 30 சதவீதத்திற்கும் குறைவாக மழை பெய்துள்ளது.
இதனால் அங்குள்ள வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் வஜீப் பகுதியில் உள்ள சபுலி வனவிலங்குகள் காப்பகத்தில் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

6 ஒட்டகச்சிவிங்கிகள்
அந்த பூங்காவில் தண்ணீர் கூட இல்லாமல் 6 ஒட்டக சிவிங்கிகள் ஒரே இடத்தில் இறந்து கிடக்கின்றன. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பார்க்க எலும்பும் தோலுமாக இருக்கும் இந்த 6 ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இடத்தில் இறந்துகிடந்தன. இது பார்ப்பதற்கு நெஞ்சை பிழிந்து எடுக்கிறது.

தண்ணீரை தேடி
இவை ஆறும் தண்ணீரை தேடி தேடி கிடைக்காமல் வெயிலின் கொடுமை தாளாமல் ஒரே இடத்தில் விழுந்து இறந்துள்ளன. அதிலும் அவை அருகில் உள்ள அணையில் தண்ணீர் வறண்டு காணப்பட்டதை அடுத்து சோர்வில் வந்த அவை சேற்றில் சிக்கி இறந்தன.

உணவு தட்டுப்பாடு
இதுகுறித்து அல்ஜசீரா கூறுகையில் வட கென்யாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மழைப்பொழிவு 30 சதவீதத்திற்கு குறைந்துள்ளது. இதனால் உணவுக்கும் தண்ணீருக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வீட்டில் வளர்க்கப்படும் உயிரினங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. ஆனால் காட்டு விலங்குகள்தான் தண்ணீர் இன்றி உயிரிழக்கின்றன.

2.5 மில்லியன் மக்கள் பாதிப்பு
காரிஸா நாட்டில் உள்ள 4000 க்கும் மேற்பட்ட ஒட்டகச் சிவிங்கிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. இதுகுறித்து கென்ய அதிபர் உஹூரு கென்யட்டா கூறுகையில் கடந்த வாரம் 2.5 மில்லியன் மக்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications