மழை மழை... துபாய் மற்றும் அமீரகத்தில் நல்ல மழை
துபாய்: துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது.
துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா, ஃபுஜைரா, அல் அய்ன், ருவைஸ் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை மழை பெய்தது.
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேகமூட்டமாகவே இருந்து வருகிறது.

சனிக்கிழமை வரை
சனிக்கிழமை காலை வரை வானம் மேக மூட்டமாகவே இருக்கலாம் என்றும், மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமீரகத்தில் உள்ள ருவைஸ் மற்றும் எல்லைப் பகுதிகளில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

மெதுவாக செல்லுங்கள்
மோசமான காலநிலை நிலவுவதால் மக்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் வாகன ஓட்டிகள் வாகனத்தின் வேகத்தை குறைத்துச் செல்ல காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

போக்குவரத்து நெரிசல்
மழையின் காரணமாக அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. நெடுஞ்சாலைகளில் வெளிச்சம் குறைந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

அடிக்கடி மழை
நாளை வரை வானிலை தற்போது இருப்பது போன்றே இருக்கும் என்பதால் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்காடான தெருக்கள்
கனமழையால் சில பகுதிகளில் தெருக்கள் வெள்ளக்காடாகின. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
-
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ஒரு சின்ன ரூம் ரூ.5.7 கோடி. புர்ஜ் கலீபாவில் சினிமா பிரபலங்கள் வீடு வாங்கி குவிப்பது ஏன் தெரியுமா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications