கத்தாரில் கொட்டு கொட்டுன்னு கொட்டிய மழை: சென்னை போல படகு விடும் யோசனையில் மக்கள்
தோஹா: கத்தாரில் இன்று கன மழை பெய்துள்ளதால் தோஹா உள்பட பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கத்தார் மக்கள் இன்று காலை எழுந்தபோதே மழையின் முகத்தில் தான் விழித்தார்கள். கத்தாரில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் சில மணிநேரம் கத்தாரில் கனமழை கொட்டித் தீர்த்தது.
மழை சில மணிநேரம் பெய்தாலும் சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகிவிட்டன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தோஹா மக்கள் ட்விட்டரில் புகைப்படம், வீடியோ வெளியிட்டுள்ளனர்.
|
தோஹா
தோஹாவில்...இது வழக்கமான காலை காட்சி அல்ல, பாலவனத்தில் மழை என மத்தியா ட்வீட் செய்துள்ளார்.
|
வெள்ளம்
தோஹாவில் லேசாக மழை பெய்தாலும் இது தான் ஆகும். எங்கு பார்த்தாலும் வெள்ளம் #Doha #Rain #Flooded என இரண்டா தரகா தெரிவித்துள்ளார்.
|
விமான நிலையம்
14 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள விமான நிலையம் என மேற்கூரை வழியாக மழை நீர் கொட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சல்மான் கான்.
|
வாகனங்கள்
சாலைகளில் நீர்- கத்தாரில் கனமழை #Qatar #DohaRain என முகமது வாசீம் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
|
பள்ளி
தோஹாவில் மழை பெய்தால் நீங்கள் பள்ளிக்கு நீந்தித் தான் செல்ல வேண்டும் #doha #asdflood என நயீசா ட்வீட் செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications