ரஷ்யாவில் திடீரென காணாமல் போன ஹெலிகாப்டர்.. 22 பேர் கதி என்ன? முழு வீச்சில் தேடும் பணி
மாஸ்கோ: ரஷ்யாவில் 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற மி -8 ரகத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் மாயமாகியது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் அந்த ஹெலிகாப்டர் என்ன ஆனது என்று தெரியவில்லை. தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ரஷ்யாவில் 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. ரஷ்யாவின் தொலை தூர கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான ஹெலிகாப்டர் மி -8 ரகத்தை சேர்ந்தது ஆகும்.

2 என்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர் 1960-களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பரவலாக இந்த ரக ஹெலிகாப்டரே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாயமான இந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் மி -8 ரக ஹெலிகாப்டர் ரஷ்யாவில் விபத்தில் சிக்கியது. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
ரஷ்யாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வகை ஹெலிகாப்டர்கள், சமீப காலமாக அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது மாயமாகியுள்ள ஹெலிகாப்டர் ஏதேனும் விபத்தில் சிக்கியதா? அல்லது வேறு ஏதேனும் சதிச்செயல் நடந்ததா? விமானத்தின் கதி என்ன என்பது பற்றிய எந்த தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை.
ரஷ்யா - உக்ரைன் இடையே சண்டை நீடித்து வருகிறது. 2 வருடங்களுக்கும் மேலாக இந்த சண்டை நீடித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களும் தீவிர தாக்குதல் நடந்து வருகிறது. உக்ரைனும் ரஷ்யா மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தான் ஹெலிகாப்டர் திடீரென மாயமாகி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications