திடீரென திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை... 120 ஏழைகளுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து வைத்த மணமகள்!
கலிபோர்னியா: கடைசி நேரத்தில் மணமகன் திருமணத்தை நிறுத்தியதால், திருமணத்திற்காக ஸ்டார் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த விருந்தை வீணாக்காமல், அவற்றை ஏழை மக்களுக்கு அளித்து பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார் அமெரிக்கப் பெண் ஒருவர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் குய்ன். இவருக்கு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக பல லட்ச ரூபாய் செலவில் ஒரு 4 ஸ்டார் ஹோட்டலில் விருந்திற்கான அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் திடீரென திருமணத்தை நிறுத்தி விட்டார் மணமகன். இதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருந்த விருந்தை அவர்கள் வீணாக்க விரும்பவில்லை.
உடனடியாக அந்நகரத்தில் வீடில்லாமல் வாடும் 120 ஏழைகளை அழைத்து வந்தனர். அவர்களுக்கு 4 ஸ்டார் ஹோட்டலில் திருமண விருந்து அளித்தனர். விருந்தை சாப்பிட்டவர்கள் மணமகளையும், அவரது தாயாரையும் மனதார வாழ்த்திச் சென்றனர்.
மணப்பெண் மற்றும் அவரது அம்மாவின் இந்த செயல் சமூகவலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications