இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதல்.. ஹமாஸ் அமைப்பின் நம்பர் 2 தலைவர் கொல்லப்பட்டாரா? பரபர தகவல்
பெய்ரூட்: ஹிஸ்புல்லாவின் உளவு அமைப்பு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் நேற்று வான் தாக்குதலை மேற்கொண்டது. இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட இருந்ததாக கூறப்படும், ஹஷீம் ஷஃபிதீனை காணவில்லை என்று லெபனான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அவர் உயிரிழந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு பாலத்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்தது.

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சி குழு ஆகியவை ஈரானின் ஆதரவுடன் இஸ்ரேலுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில்தான், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் நஸ்ரல்லாவுடன் இருந்த ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் என்பவரும் கொல்லப்பட்டார். ராணுவ தளபதியின் உயிரிழப்புக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது.
இதனால் அங்கு போர் பதற்றம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஹிஸ்புல்லாவின் உளவு அமைப்பு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதலை மேற்கொண்டது. இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட இருந்ததாக கூறப்பட்ட, ஹஷீம் ஷஃபிதீனை காணவில்லை என்று லெபனான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பிறகு ஹஷீம் ஷஃபிதீனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று லெபனான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஹிஸ்புல்லாவின் ராணுவ நடவடிக்கைகளை நிர்வகிக்கும் கவுன்சிலில் நிர்வாகியாக இருந்தவர் தான் ஹஷீம் ஷஃபிதீன். இவர் ஹிஸ்புல்லாவின் அரசியல் விவகாரங்களை கண்காணித்து வந்தவர்.
நஸ்ரல்லா படுகொலைக்கு பின்னர் ஹஷீம் ஷஃபிதீன் தான் ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர் ஆகலாம் என்று கூறப்பட்டது. ஹமாஸ் அமைப்பின் நம்பர் 2 தலைவராக அறியப்பட்டார். நேற்று காலையில் ஹஷீம் ஷஃப்பிதீனை குறிவைத்து பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் உளவுத்துறை தலைமையகத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் தான் ஹஷீம் ஷஃப்பிதீன் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications