அமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹிலாரி போட்டி- நாளை அறிவிப்பு வெளியாகிறது!!
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. ஆளும் குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆகியவை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

இரு கட்சிகளிலும் உள்ள முக்கிய பிரமுகர்கள் இத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஜனநாயக கட்சி தனது அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளின்டனை அறிவிக்கிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hillary Clinton will announce her candidacy Sunday in video on social media, source close to campaign tells me. Then shes traveling to Iowa.
— Brianna Keilar (@brikeilarcnn) April 10, 2015 ஒபாமாவின் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஹிலாரி பணியாற்றியுள்ளார். முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியான ஹிலாரி, செனட்டராகவும் இருந்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார் ஹிலாரி.
இதற்காக அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார். இளைஞர்களை கவரும் வகையில் இணையதளம் வழியாக பிரசாரம் செய்ய ஹிலாரி திட்டமிட்டுள்ளார். 67 வயதான ஹிலாரி, அதிபரானால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications