ஒரு பெண் அமெரிக்கா அதிபராவதை காண விரும்பவில்லையா?: கேட்பது ஹிலாரி கிளிண்டன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு பெண் அதிபராவதை நீங்கள் விரும்பவில்லையா? என்று கேள்வி கேட்டு 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் ஜனநாயக கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருப்பவர். அவர் 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இது தொடர்பாக நேரடியாக ஹிலாரி கிளிண்டன் கருத்து கூறுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஹிலாரி கிளிண்டன் நேற்று இரவு கலந்து கொண்டார்.
இதில் பேசிய ஹிலாரி கிளிண்டன், பெண் சமத்துவம் பற்றி பேசத் தொடங்கினார்.. பெண்கள் ஒவ்வொரு நிலைகளிலும் பொதுவாழ்க்கையிலும் ஆண்களுக்கு சமமாக இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே வந்தார்.
ஒரு கட்டத்தில் மிகுந்த உற்சாகத்துடன், நீங்கள் அமெரிக்காவின் அதிபராக ஒரு பெண் வருவதை விரும்பவில்லையா? என்று அரங்கில் இருந்தவர்களைப் பார்த்து கேள்வி எழுப்ப கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது.. இந்த கைதட்டல் ஓய சில நிமிடங்களானது.
இந்த ஆதரவுக் குரலால் ஹிலாரியின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி வெளிப்பட்டது. அதே நேரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராக ஹிலாரி இருந்த காலத்தில் இ மெயில்களை பயன்படுத்தியது தொடர்பான சர்ச்சை குறித்த கேள்விகளை ஹிலாரி தவிர்த்தும் விட்டார்.
தற்போது அமெரிக்காவின் அதிபராக ஒரு பெண் வர வேண்டும் என்கிற கருத்தை கூறியுள்ளதன் மூலம் அதிபர் தேர்தலில் தாம் போட்டியிட இருப்பதை மறைமுகமாக ஹிலாரி வெளிப்படுத்தியிருக்கிறார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications