ஐஎஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கியது ஹிலாரி கிளின்டன்... டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வாஷிங்கடன்: ஹிலாரி கிளின்டன் தான் ஐஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர்
என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ந்தேதி நடைபெறுகிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இருகட்சி அதிபர் வேட்பாளர்களும்
தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் டொனால்டு டிரம்ப் தற்போது புதிய பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் தான் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் என்று கூறியுள்ளார், இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் தேர்தல் குறித்த பேரணி நடைபெற்றது. அப்போது குடியரசு
கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தெரிவித்ததாவது: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஹிலாரி கிளிண்டன் தான் உருவாக்கினார் என மறைமுகமாக தெரிவித்தார்.
இதுபோன்ற ஒரு இயக்கத்தை உருவாக்கியதற்காக அந்த ஐஎஸ் அமைப்பிடம் இருந்து அவர் விருதை பெற வேண்டும். ஐ.எஸ் தீவிரவாதிகள் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நடத்திய பயங்கர தாக்குதல்களை பட்டியலிட்ட டிரம்ப், ஐஎஸ் அமைப்பை இந்த அளவிற்கு நாம் வளர விட்டிருக்கிறோம் என்று கூறினார்.
கடந்த சில நாட்களாக டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்தின் போது ஹிலாரி கிளின்டனை நேர்மையற்றவர் என கூறிவந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவர் ஒரு பேய் எனவும் விமர்சித்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications
