ஹிலாரி கிளிண்டனுக்கு ஏகப்பட்ட உடல்நலப் பிரச்சனைகள்: புத்தகத்தில் 'திடுக்' தகவல்
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுக்கு தற்போதைய அதிபர் ஒபாமாவை பார்த்தாலே பிடிக்காது என்று இந்த வாரம் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ம் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் ஹிலாரி கிளிண்டனுக்கு உள்ளது. இந்நிலையில் அவரது எண்ணத்தில் இடியை இறக்குவது போன்று ஒரு புத்தகத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எட்வர்ட் க்ளெய்ன் எழுதிய பிளட் ஃபியூட்(Blood Feud) என்ற அந்த புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் இதோ...

பல நோய்கள்
ஹிலாரி கிளிண்டனுக்கு இதய பிரச்சனை, மூளைக்கும், மண்டை ஓட்டுக்கும் இடையே ரத்தக்கட்டு, தைராய்டு உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் உள்ளன. அவரது மூளையில் இருந்து இதயத்துக்கு ரத்தம் செல்லும் குழாயில் அவருக்கு ரத்தக் கட்டு உள்ளது.

விமானங்கள்
ஹிலாரி பல மணிநேரம் விமான பயணம் செய்தால் அவரது ரத்தம் உறையும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் 2009ம் ஆண்டு ஏமன் செல்ல விமானம் ஏறும்போது மயங்கி விழுந்து முழங்கையை ஒடித்துக் கொண்டார். அவர் பல முறை மயங்கி விழுந்துள்ளார்.

பில் கிளிண்டன்
நான் இதுவரை பார்த்த நபர்களிலேயே எனக்கு பிடிக்காத ஆள் என்றால் அது ஒபாமா தான் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

பேச்சு
ஒபாமா என்னிடம் பேசும் முறையே எனக்கு பிடிக்கவில்லை. சில நேரம் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்போம் என்று பில் கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

மிஷல்
கோல்ப் விளையாடுகையில் பில் கிளிண்டன் ஒபாமாவிடம் தனது மனைவி அதிபர் பதவிக்கு சிறந்த ஆள் என்று கூற பதிலுக்கு ஒபாமா என் மனைவி மிஷலும் சிறந்த அதிபர் வேட்பாளராக இருப்பார் என்று கூறியுள்ளார். இதை கேட்ட பில் கிளிண்டன் வாயடைத்து போயுள்ளார்.

ஹிலாரியுடன்?
பாரக் மிஷலின் தகுதியை ஹிலாரியுடனா ஒப்பிடுகிறார்? என்று பில் கிளிண்டன் தெரிவித்துள்ளார். டீல் பேசி முடிக்க வேண்டி இருந்தது இல்லை என்றால் கோல்பை பாதியில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி இருப்பேன் என்று கிளிண்டன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
