For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கேயும் இந்தியை திணிக்கிறாங்கய்யா!

விண்வெளியில் உருவாக உள்ள புதிய நாட்டில் இந்தியா சார்பில் இந்தி மொழி மட்டுமே இடம்பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

மாஸ்கோ: விண்வெளியில் அஸ்கார்டியா என்ற நாடு உருவாக உள்ளது. அந்த நாட்டில்வ இந்தியா சார்பில் இந்தி மொழி மட்டுமே இடம் பெற்றுள்ளது.

ஏரோஸ்பேஸ் இன்டர்நேஷனல் ஆய்வு அமைப்பின் தலைவர் அஷுர்பெய்லி விண்வெளியில் ஒரு நாட்டை உருவாக்கவுள்ளார். இந்த நாட்டிற்கு அஸ்கார்டியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் இந்த நாட்டிற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாட்டுக்கு தேர்வு

புதிய நாட்டுக்கு தேர்வு

இந்த புதிய நாட்டில் குடியேற 200 நாடுகளைச் சேர்ந்த 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2 லட்சம் பேர் புதிய நாட்டிற்கு குடி பெயர தேர்வாகியுள்ளனர்.

அதிகாரப்பூர்வ மொழிகள்

அதிகாரப்பூர்வ மொழிகள்

புதிய நாட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தவுடன் இவர்கள் அங்கு அழைத்து செல்லப்படவுள்ளனர். இந்நிலையில் அஸ்கார்டியா நாட்டுக்கான அதிகாரப் பூர்வ மொழிகளாக இங்கிலிஷ், ஸ்பேனிஷ், சைனீஸ், துருக்கிஷ், ஃபிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ரஷ்யன், ஜாப்பனீஸ், அரபிக், இந்தி, போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் இருந்து இந்தி

இந்தியாவில் இருந்து இந்தி

பலதரப்பட்ட மொழிகள் பேசப்படும் இந்தியாவில் இருந்து இந்தி மொழி மட்டுமே விண்வெளி நாட்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விண்வெளி நாட்டிலும் இந்தி மொழி இப்போதே திணிக்கப்படுகிறது.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு

இந்தியாவில் பல மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் இந்தி நுழையவே கூடாது என்பதில் தமிழ் ஆர்வலர்கள் தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A new country will be formed in the space named asgardia. Over 5 lakh people from 200 countries have applied to go. Hindi also in the list of official languges of Asgardia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X