பாகிஸ்தானில் இன்னொரு ஷாக்... 24 வயது இந்து பெண்ணை கடத்தி.. இஸ்லாமுக்கு மாற்றி.. கட்டாய திருமணம்!

இந்து பெண்ணை கடத்தி சென்று கட்டாய மதமாற்றம் செய்துள்ளார் முஸ்லீம் இளைஞர்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இன்னொரு அதிர்ச்சி பாகிஸ்தானில் நடந்துள்ளது.. இந்து மணப்பெண்ணை கல்யாண மண்டபத்தில் இருந்தே கடத்திவிட்டார்கள்.. அப்படியே கூட்டிட்டு போய் மதம் மாற்றி வேறு ஒருவருக்கு கட்டாய கல்யாணமும் செய்து வைத்துள்ளனர்.

பாகிஸ்தானில் சமீப காலமாக சிறுபான்மையினராக வாழும் இந்து, கிருஸ்தவ மற்றும் சீக்கிய பெண்கள் கடத்திச் செல்லப்படுவதும், அவர்களை கட்டாய மதமாற்றம் செய்து முஸ்லீம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

Hindu girl woman abducted from wedding in Pakistan

நாளுக்கு நாள் இந்த அவலம் நீடித்தும் வருகிறது.. அந்த வகையில், சிந்து மாகாணம் மதியரி மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஹலா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் தாஸ். இவரது மகள் பாரதி பாய்.. 24 வயது பெண்.. இவருக்கு பெற்றோர் வீட்டில் கல்யாணம் செய்ய முடிவு செய்து, அதற்கான ஏற்பாட்டில் இறங்கினர்.

மாப்பிள்ளை பார்த்து, பத்திரிகையும் அடித்து, ஊரையும் கல்யாணத்துக்கு அழைத்திருந்தனர்.. மண்டபமே சுறுசுறுப்பாக இருந்தது.. கல்யாண பெண் பாரதி, மணமேடைக்கு வர ரெடியாகி கொண்டிருந்தார்.. அப்போது, திடீரென ஷா ருஹு குல் என்பவர் மண்டபத்துக்குள் போலீசுடன் நுழைந்தார்... மணக்கோலத்தில் இருந்த பாரதி பாயை அங்கிருந்து கடத்தி சென்றுள்ளார்.

இதனால் பதறி போன பெற்றோர், போலீசில் புகார் தந்தனர்... தன் மகளை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்திற்கு மதமாற்றம் செய்து, ஷா ருஹு குல் கல்யாணம் செய்து கொண்டதாக குற்றஞ்சாட்டியதுடன், தங்களிடம் மகளை திருப்பி ஒப்படைக்கும்படியும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சமயத்தில்தான், பாரதி பாய் முஸ்லிம் மதத்திற்கு மாறியதற்கான ரிக்கார்டுகளும், ஷா ருஹு குல்லாவுடன் கல்யாணம் செய்து கொண்டது போன்ற போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியானது. இந்த ஆவணத்தின்படி, பாரதி பாய் கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதியே முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பாரதியின் பெயர் புஷ்ரா என்றும் உள்ளது.

அதாவது, பாரதியை, ஷா ருஹு குல் கடந்த டிசம்பர் மாதமே முஸ்லிம் மதத்திற்கு மதம் மாற்றம் செய்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டுள்ளாராம்.. ஆனால் இந்த விஷயம் வீட்டில் தெரியவந்ததுமே அவசர அவசரமாக கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்கிறார்கள். அதனால்தான், பாரதிக்கு திருமணம் என்று கேள்விப்பட்டதும், ஷா ருஹு குல் போலீசார் உதவியுடன் கல்யாண பெண் பாரதியை கடத்தி சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+