பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபா நீக்கப்படுகிறது: ஒபாமா தகவல்
வாஷிங்டன்: பயங்கரவாத நாடுகள் என்ற பட்டியலில் இருந்து கியூபாவை அமெரிக்கா விரைவில் நீக்கும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பனாமாவில் ஆண்டு தோறும் நடைபெறும் பிராந்திய மாநாட்டில் கியூபா கலந்து கொள்ளும். ஆனால் கியூபா அதிபர் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து 1994ஆம் ஆண்டு முதல் இம்மாநாட்டை அமெரிக்கா புறக்கணித்து வந்தது.

அண்மையில் கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என அமெரிக்கா அதிபர் ஒபாமா அறிவித்தார். இது தொடர்பாக கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோவுடனும் தொலைபேசியில் ஒபாமா பேசினார்.
இதனைத் தொடர்ந்து அரை நூற்றாண்டுகாலமாக இரு நாடுகளிடையே நீடித்து வந்த பகைமை உறவு மறைந்து நட்புறவு துளிர்க்கத் தொடங்கியது. இந்நிலையில் பனமாவில் இன்று தொடங்கும் பிராந்திய மாநாட்டில் ஒபாமா கலந்து கொள்ள இருக்கிறார்.
கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோ இம்மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே இப் பிராந்திய மாநாட்டில் பங்கேற்க செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவது தொடர்பான நடைமுறைகளை நிறைவு செய்துள்ளோம். விரைவில் கியூபா அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட இருக்கிறது என்றார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications