வரலாற்று சிறப்புமிக்க தருணம்.. சீனாவில் டிரம்ப்! கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தம்!
பெய்ஜிங்: எலியும் பூனையுமாக இருந்த அமெரிக்கா-சீனா தற்போது பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கின்றன. அந்த வகையில் இன்று சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று சொல்லப்படுகிறது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறை. பெய்ஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்' மாளிகையில் ஷி ஜின்பிங் ட்ரம்ப்பிற்குச் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இந்தச் சந்திப்பில் உலக நாடுகளைப் பாதிக்கும் பல முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த ஆண்டு நிலவிய வர்த்தகப் போரைத் தவிர்க்கவும், அமெரிக்க விவசாயப் பொருட்கள் மற்றும் போயிங் விமானங்களைச் சீனா வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
அதேபோல தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதைச் சீனா எதிர்க்கிறது. இது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர். இதுதவிர, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் ஈரான் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதிப்பது குறித்தும், இதில் சீனாவின் தலையீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செமிகண்டக்டர் சிப்கள் தயாரிப்பில் உள்ள போட்டிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எலான் மஸ்க் மற்றும் என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் ஆகியோரும் ட்ரம்ப்புடன் சீனா சென்றுள்ளனர். எனவே இந்த பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மறுபுறம், தமக்கும் ஷி ஜின்பிங்கிற்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாகவும், சீனா தனது சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்றும் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், சீனா இந்த விஷயத்தில் ரொம்பவும் கறார் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications