For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு ஒபாமாவிடம் ஆதரவு கேட்ட பிரான்ஸ் அதிபர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பிரான்சு நாட்டு அதிபர் பிரான்கோயிஸ் ஹாலன்டே, திடீர் விஜயமாக அமெரிக்கா சென்று அதிபர் பராக் ஒபாமாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை ஒழிப்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

வாஷிங்டனுக்கு நேற்று வருகை தந்த ஹாலன்டே, வெள்ளை மாளிகையில், அதிபர் பராக் ஒபாமாவுடன் சில மணி நேரங்கள் ஆலோசனை நடத்தினார். ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக போர் நடத்தப்படும் என பிரான்ஸ் அறிவித்த சில நாட்களில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.

Hollande meets Obama seeking to ramp up ISIS fight

போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதால், துருக்கி-ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது.

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு எதிரான பிரான்சின் நடவடிக்கைக்கு, அமெரிக்காவின் ஆதரவை ஹாலன்டே நாடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
President Francois Hollande arrived at the White House on Tuesday seeking support for his newly declared war on the Islamic State group, as the US warned its citizens worldwide of heightened terror risks following the Paris attacks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X