"எங்களால் முடியல" ஹாலிவுட் பிரபலங்களுக்கே இந்த நிலையா! அமெரிக்க காட்டுத்தீயால் வீடுகளை இழந்த சோகம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு வரலாறு காணாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு ஹாலிவுட் மற்றும் இசை பிரபலங்கள் கூட தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மேலும், ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகில் பரப்பளவு அடிப்படையில் 3வது மிகப் பெரிய நாடாக அமெரிக்கா இருக்கிறது. இதனால் பல்வேறு வகையான நிலப்பரப்புகளையும் வானிலைகளையும் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

இதன் காரணமாக அங்குக் காட்டுத்தீ என்பது அவ்வப்போது ஏற்படும். குறிப்பாக கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள காடுகளில் காட்டுத்தீ அவ்வப்போது ஏற்படும். அவை பெரும்பாலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், இந்த முறை அங்கு ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கலிபோர்னியா காட்டுத்தீ:
அதிலும் கலிஃபோர்னியா என்பது இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணிபுரியும் மாகாணமான கலிஃபோர்னியாவில் இந்த காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், இது அங்குப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயில் சிக்கிக் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 1,500 கட்டிடங்களும் வீடுகளும் இதனால் சேதமடைந்துள்ளன. மேலும், சுமார் 2 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு ஆஸ்கார் விருது தேர்வு பணிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. காட்டுத்தீயை அணைப்பதிலும் மக்களைப் பாதுகாப்பாக மீட்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஆஸ்கார் தேர்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image courtesy: Yahoo
ஹாலிவுட் பிரபலங்கள்: :
மேலும், இந்த காட்டுத்தீ காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக ஹாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் இருக்கிறது. அங்குச் செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வசிக்கும் கலாபாசாஸ் மற்றும் சாண்டா மோனிகா பகுதிகளிலும் காட்டுத்தீ மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் பிரபலங்கள், இசை பிரபலங்கள் எனப் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர்.
குறிப்பாக இதில் ஹாலிவுட் பிரபலங்கள் வாழும் பகுதி தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பேட்மேன் புகழ் பென் அஃப்லெக், பில்லி கிரிஸ்டல், ஜான் குட்மேன், கேரி எல்வெஸ், மாண்டி மூர், பாரிஸ் ஹில்டன் என்று பலரும் இந்த காட்டுத்தீயால் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
கைவிரித்த தீயணைப்பு வீரர்கள்:
காட்டுத்தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் தலைவர் ஆண்டனி மர்ரோன் கூறுகையில், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நிலைமையைச் சமாளிக்க போதுமான தீயணைப்பு வீரர்கள் தங்களிடம் இல்லை. நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு வீரர்களே திணறி வருவதால் காட்டுத்தீயை அணைக்க மேலும் பல நாட்கள் வரை ஆகலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்படி ஒருவேளை பல நாட்கள் ஆனால், இது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்க அதிபராக இருக்கும் பைடனும் கூட தனது சர்வதேச பயணங்களை ரத்து செய்துவிட்டு தீயை அணைக்கும் பணிகளைக் கண்காணித்து வருகிறார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications