கலிபோர்னியாவில் தலைவிரித்தாடும் வறட்சி: குளிக்காமல் கப்பு அடிக்கும் ஹாலிவுட்
கலிபோர்னியா: கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கலிபோர்னியா மாநிலத்தில் பிரபலங்கள் குளிப்பதை குறைத்துக் கொண்டு, முடிந்த அளவுக்கு தண்ணீர் பயன்பாட்டை குறைத்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் தண்ணீர் பயன்பாட்டை 25 சதவீதம் குறைக்குமாறு கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
தண்ணீரை வீணாக்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பெவர்லி ஹில்ஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்ட் ரஸ்ஸல்
ஹாலிவுட் நடிகர் கர்ட் ரஸ்ஸல் தனது திராட்சை தோட்டத்தில் உள்ள செடிகளை அருகருகே நட்டு வைத்துள்ளார். இதன் மூலம் தண்ணீர் பயன்பாட்டை குறைக்கலாம் என்று அவர் அவ்வாறு செய்துள்ளார்.

கேமரூன் டியஸ்
ஹாலிவுட் நடிகை கேமரூன் டியஸும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஷேரன் ஆஸ்பர்னும் சிறுநீர் கழித்தால் டாய்லெட்டை ஃபிளஷ் செய்ய மாட்டார்களாம். இரண்டுக்கு போனால் மட்டும் தான் ஃபிளஷ் செய்வோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்லான்டோ ப்ளூம்
ஹாலிவுட் நடிகர் ஆர்லான்டோ ப்ளூம் கூறுகையில், தண்ணீரை மிச்சப்படுத்த நான் சில சமயம் ஒரு வாரம் துவைக்காமல் ஆடை அணிகிறேன். மேலும் குளிப்பதையும் குறைத்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

கிம் கர்தாஷியன்
ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியன் நீரை சேமிக்க 5 நாட்களுக்கு ஒரு முறை தான் தலைக்கு குளிக்கிறாராம். நடிகை கிறிஸ்டன் பென் தண்ணீரை மிச்சப்படுத்த 7 நாட்களுக்கு முகத்தை கழுவுவதை நிறுத்தியுள்ளாராம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications