ஒபாமா, மன்மோகன் சிங்குடன் விருந்து சாப்பிடுகிறாரா மிஸ் அமெரிக்கா நினா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மிஸ் அமெரிக்கா அழகிப் பட்டம் வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நினா தவுலுரியை மதிய விருந்துக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அழைக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மிஸ் அமெரிக்கா அழகிப் பட்டம் வென்ற முதல் இந்திய-அமெரிக்கர் நினா தவுலுரி(24). சீமாந்திராவைச் சேர்ந்த நினா உடல் பருமன், ஆஸ்துமாவால் அவதிப்பட்டுள்ளார். இருப்பினும் 30 கிலோ வரை எடையை குறைத்துள்ளார் அவர்.

Obama, Manmohan lunch and Nina Davuluri

இந்நிலையில் தெற்காசிய விவகாரத்துறையின் முன்னாள் அமெரிக்க செயலாளர் கார்ல் இன்டர்ஃபர்த் கூறுகையில்,

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அடுத்த வெள்ளிக்கிழமை அன்று சந்திக்கையில் அவர்கள் மிஸ் அமெரிக்கா நினாவை அழைத்து கௌரவப்படுத்தலாம். மேலும் அவருக்கு மதிய விருந்து கூட அவர்கள் அளிக்கக்கூடும். இந்திய-அமெரிக்க சமூகம் தற்போது அமெரிக்காவில் பலவற்றை செய்து வருகிறது. ஸ்பெல்லிங் பீயில் வெற்றி பெற்றுள்ளது என்றார்.

மன்மோகன் சிங் வரும் 27ம் தேதி வாஷிங்டனில் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவருக்கு ஒபாமா மதிய விருந்து அளிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+