ஆசை வந்தாலும் "அதை" கடிப்பது.. கோபம் வந்தாலும் "அதை"யே கடிப்பது.. ஒரு அளவு வேணாமா?!
கோபத்தில் காதலியின் உதட்டை கல்லூரி மாணவன் கடித்து துப்பினார்.
கிரீன் வில்லி, தெற்கு கரோலினா: ஆசை வந்தாலும் உதட்டை கடிக்க வேண்டியது? கோபம் வந்தாலும் உதட்டை கடிக்க வேண்டியதா? வெறிக்கு ஒரு அளவு வேணாமா?
அமெரிக்காவில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சேத் ஆரோன் ப்லூரி, என்ற கல்லூரி மாணவனுக்கு ஒரு பெண் மீது லவ் வந்துவிட்டது. அந்த பெண் சேத்தின் கிளாஸ்மேட்தான். அவர் பெயர் ஹேயஸ்.

எப்பவுமே சண்டைதான்
அவரும் சேத்தை காதலித்தார். இருவருக்குமே வயசு 19தான். ஆனால் சண்டைக்கு ஒரு அளவே இல்லை. எப்ப பார்த்தாலும் ரெண்டு பேர் சண்டை போடறதை அந்த காலேஜே அடிக்கடி வேடிக்கை பாக்கும். 2 பேரில் ரொம்ப கோவக்காரரு சேத் தானாம்.

பிரிஞ்சுடலாம்
இப்படித்தான் ஒரு சண்டை வழக்கம்போல் வந்திருக்கிறது. வழக்கம்போல் சேத்துக்கு கோபம் மண்டைக்கு ஏறிவிட்டது. அந்த நேரம் பார்த்து ஹேயஸ், "இப்படியே சண்டை போட்டுட்டு இருந்தா சரி வராது, நாம பேசாம பிரிஞ்சு போயிடலாம்" என்று சொன்னார். அப்பதான் சண்டை போட்டு ஓய்ந்து போய் ஆத்திரத்தில் இருந்த சேத் இதனை கேட்டதும், இன்னும் டென்ஷன் ஆகிவிட்டார்.

பலமாக கடித்தார்
ஆனால் இதனை வெளிக்காட்டிக் கொள்ளாத சேத் "சரி, சரி... நாம பிரிஞ்சுடலாம். கடைசியா வா நாம ஒருமுறை கிஸ் பண்ணிக்கலாம்" என்றார். அதற்கு ஹேயஸ் மறுத்து, முத்தமெல்லாம் வேண்டாம் என்றார். ஆனாலும் சேத் ஹேயஸ் அருகே சென்று முத்தமிட முயற்சித்தார். வேண்டாம் என்று சொல்லியும் முத்தமிட முயற்சித்த சேத்தை ஹேயஸ் தடுத்துவிட்டார். இதனால் சேத்துக்கு அடக்கி வைத்த கோபம் வெடித்து, ஹேயஸின் உதட்டை பலமாக கடித்து துப்பிவிட்டார்.

பிஞ்சுபோன உதடு
இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஹேயஸ் வலியால் அலறி துடித்தார். இப்படி சேத் தன் உதட்டை கடித்து துப்புவார் என்று ஹேயஸ் எதிர்பார்க்கவே இல்லை. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உதடு இல்லாமல் வந்த ஹேயஸை பார்த்து ஆஸ்பத்திரியே ஆடிப் போய்விட்டது. உடனடியாக அவரது பிஞ்சு போன உதட்டை ஒட்ட வைக்க படாத பாடு பட்டிருக்கிறார்கள்.

12 வருட சிறை
கடைசியில் ஹேயசுக்கு 300 தையல்களை டாக்டர்கள் போட்டார்களாம். இதனையடுத்து காதலி உதட்டை கடித்த துப்பிய புகாரில் சேத் கைது செய்யப்பட்டு, கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்ன தண்டனை சேத்துக்கு கொடுத்தார்கள் தெரியுமா? 12 ஆண்டுகளுக்கு களி திண்ண ஸாரி... ப்ரெட் திண்ண வைத்துவிட்டார்கள்.
பயபுள்ள கமர்கட் மாதிரியே கடிச்சிருச்சே!
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications