தொங்கிய "உறுப்புகள்".. சூப்பில் மிதந்த "விரல்கள்".. ஃப்ரிட்ஜை திறந்தால் "அழகி".. அலறிய போலீஸ்.. ஐயோ
மாடல் அழகியை கொன்று துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார் அவரது கணவர்
ஹாங்காங்: கொலை செய்துவிட்டு, இப்போதெல்லாம் அந்த சடலங்களை சுடுகாட்டில் புதைப்பது கிடையாது.. நேராக சடலத்தை கொண்டுவந்து ஃப்ரிட்ஜில்தான் வைத்துவிடுகிறார்கள் கொடூரர்கள்.
ஃப்ரிட்ஜை திறந்தாலே சடலங்கள் அல்லது கொலை செய்யப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் இருப்பது, நம் வடமாநிலங்களில் அதிகரித்து வருகிறது.. தென்மாநிலங்களிலும் இந்த பயங்கரம் நடக்க துவங்கி உள்ளது.
கடந்த 2 மாத காலத்தில் மட்டும் எப்படியும் 4, 5 கொலைகள் இப்படி நடந்துள்ளன.. நம்ம ஊர் ஃப்ரிட்ஜ்கள் இப்படி இருக்கிறது என்று பார்த்தால், வெளிநாட்டில் உள்ள சில ஃபிரிட்ஜ்களிலும் இப்படித்தான் போலும்.

அழகி
அந்த இளம்பெண்ணின் பெயர் அபி சோய்.. 28 வயதாகிறது.. பிரபல மாடல் அழகியாக இருந்தவர் .. சர்வதேச அளவில் புகழ் பெற்றவரும்கூட.. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில், கடந்த 2023-ம் ஆண்டுக்கான எலீ சாப் ஸ்பிரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சியில் அழகி கலந்து கொண்டார். இந்த நிகழ்வை, எல்அபிசியல் மொனாக்கோ என்ற இதழ் செய்தியாக அதை வெளியிட்டிருந்தது.. இது ஒரு பேஷன் பத்திரிகையாகும்.. அந்த பத்திரிகையின் டிஜிட்டல் முகப்பு பக்கத்திலேயே அழகியின் போட்டோவும் இடம் பெற்றிருந்தது.. ஏற்கனவே இந்த அழகி சோஷியல் மீடியாவில் பிரபலமானவர்.. இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு 1 லட்சம் ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்களாம்.

உடல் உறுப்புகள்
"வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் நான் அனுபவித்து வருகிறேன்" என்று அதில் தெரிவித்திருக்கிறார்.. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.. ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.. ஆனாலும் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டார்... இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இந்த அழகி காணாமல் போய்விட்டார்.. இதனால், போலீசார் அவரை தேடி வந்தனர்.. 2 நாட்களுக்கு முன்புதான், தாய் போ மாவட்டத்தில், சில உடல்பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் உடல்பாகங்களை சேகரித்து ஆராய்ந்தனர்.. அவை எல்லாம் காணாமல் போன அழகியின் உடல்பாகங்கள் என்பது தெரியவந்தது.

ஃப்ரிட்ஜில் கால்கள்
ஆனால், நிறைய உடல்பாகங்களை காணவில்லையாம்.. எனவே சந்தேகமடைந்த போலீசார், அந்த பெண்ணின் மாமியார் வீட்டுக்குள் சோதனையை நடத்தினர்.. அப்போதுதான், அந்த பெண்ணின் 2 கால்களும் பிரிட்ஜில் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.. தலை, உடல், கைகள் இன்னும் கிடைக்கவில்லை.. இந்த கொடூரத்தை செய்தது, அவரை முன்னாள் கணவர் என்பதும் உறுதியாகி உள்ளது.. இந்த விஷயம் தெரிந்ததுமே, அவர் காணாமல் போய்விட்டார்.. எனவே, அவரை கண்டுபிடிப்பதற்காகவே 100 போலீசார்கள் நியமிக்கப்பட்டு, தேடுதல் வேட்டையிலும் இறங்கினர்.. இதைதவிர, ஆளில்லா விமானமும், மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

வாட்ச்கள்
இறுதியில் அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.. தன்னை தேடுவதை அறிந்த அந்த கணவர், வேறொரு தீவுக்கு தப்பி செல்ல முயன்றபோது சிக்கிவிட்டார்.. அவரது சகோதரர் மற்றும் மாமனார் ஆகியோரையும் பிடித்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. கணவர் தப்பி செல்லும்போது அவரிடம் ரூ.52.81 கோடி ரொக்கம் மற்றும் லட்சக்கணக்கில் மதிப்புள்ள பல்வேறு ஆடம்பர ரக வாட்சுகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.. சொத்து தகராறுக்காகவே இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.. அழகியின் மிச்சம் மீதி உடல் பாகங்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.

சூப்பில் விரல்கள்
லுங் மெய் என்ற கடற்கரை கிராமத்தில்தான், மாடல் அழகியின் மாமியார் வீடு உள்ளது.. அங்கு வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள்.. அந்த வீட்டின் ஃபிரிட்ஜை திறந்தால்தான், கால், கை விரல் என உடல் உறுப்புகள் வெளியே நீட்டிக் கொண்டு இருந்ததாம்.. ப்ரிட்ஜில் 2 கால்கள் இருந்த நிலையில், மேலும் கிச்சனில் சோதனை நடந்துள்ளது.. அப்போது, வீட்டில் சூப் தயாரித்து வைத்திருக்கிறார்கள்.. அந்த சூப் பானைக்குள் கை விரல்கள் மிதந்து கிடந்ததாம்.. இது அந்த மாமியார் செய்த காரியம் என்கிறார்கள்.. அவரையும் கைது செய்துள்ளனர்.. ஆக, மாமனார், மாமியார், மைத்துனர், கணவர் என 4 பேரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் ஹாங்காங் முழுவதும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications