இங்கிலாந்து மருத்துவமனையில் “பேய்” – காதலிக்கு போட்டோ அனுப்பப் போய் கிலியான காதலர்!
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பேய் நடமாடுவதாக புகார் கூறிய மருத்துவமனை ஊழியர் ஒருவர் அதற்கான ஆதரத்தையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள மேற்கு யோர்க்சைர் நகரில் லீட்ஸ் ஜெனரல் இன்பிர்மரி என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வரும் ஆண்ட்ரூ மில்பர்ன் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு பணிக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இரவு நேரத்தில் தனது காதலியுடன் எஸ்.எம்.எஸ் மூலம் உரையாடிக் கொண்டிருந்தபோது தான் மருத்துவமனையில் பணியில் இருக்கிறேன் என்று ஆண்ட்ரூ கூறியதை அவரது காதலி நம்பவில்லை.
தனது காதலிக்கு நிரூபிக்கும் வகையில் குழந்தைகள் பகுதியின் நடைபாதையை தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளார். பின்னர், அந்த புகைப்படத்தை தனது காதலிக்கு அனுப்ப முயற்சித்தபோது சட்டென அவரது பார்வைக்கு புகைப்படத்தில் இருந்த அந்த வெள்ளை நிற புகை போன்ற உருவம் தெரிந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications