விமான கடத்தல்காரருடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்த பிணையக் கைதி: எதற்கு தெரியுமா?
கெய்ரோ: எகிப்து விமானத்தை கடத்திய சயிப் எல் தின் முஸ்தபாவுடன் பிணையக் கைதி ஒருவர் சிரித்தபடி செல்ஃபி எடுத்துள்ளார்.
எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 81 பயணிகள் மற்றும் 7 சிப்பந்திகளுடன் கெய்ரோ கிளம்பிய விமானத்தை எகிப்தை சேர்ந்த சயிப் எல் தின் முஸ்தபா என்பவர் கடத்திச் சென்று சைப்ரஸில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் வலுக்கட்டாயமாக தரையிறக்க வைத்தார்.
அவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை காட்டி விமானத்தை தரையிறக்குமாறு மிரட்டியதாக விமானி உமர் அல் கமால் தெரிவித்தார். எகிப்து அதிகாரிகள் முஸ்தபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர் 4 சிப்பந்திகள் மற்றும் 3 பயணிகளை தவிர்த்து மீதமுள்ளவர்களை விடுவித்தார்.
Ben Innes from #Aberdeen poses for a picture with #EgyptAir #MS181 hijacker. pic.twitter.com/ywdGYuDWwm
— Paul Smith (@Journo_Paul) March 29, 2016
சைப்ரஸில் வசிக்கும் தனது முன்னாள் மனைவியை சந்திக்க வேண்டும் என்று கூறினார். என்ன கோரிக்கை விடுப்பது என்றே தெரியாமல் மாறி, மாறி பேசுகிறார், இந்த நபர் தீவிரவாதி அல்ல ஒரு முட்டாள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறுதியில் விமானத்தில் இருந்த 7 பேரும் தப்பித்த பிறகு அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் பிணையக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 3 பயணிகளில் ஒருவரான இங்கிலாந்தின் லீட்ஸ் நகரை சேர்ந்த பென் இன்னஸ்(26) என்பவர் முஸ்தபாவுடன் செல்ஃபி எடுத்துள்ளார். பென் தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டீன் நகரில் வசிக்கிறார்.
இது குறித்து பென் கூறுகையில்,
முஸ்தபா தனது உடலில் கட்டியிருந்தது உண்மையான வெடிகுண்டு பெல்ட்டா என்பதை அருகில் சென்று பார்க்க அவருடன் செல்ஃபி எடுத்தேன் என்றார்.
முஸ்தபா தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்ட் போலியானது என்பது பின்னர் தெரிய வந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications