Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பெரிய ஸ்டீல் பந்து.." பூகம்பத்திலும் தைவான் கட்டிடம் சரியாமல்.. கம்பீரமாக நிற்க இதுதான் காரணம்! செம

Subscribe to Oneindia Tamil

தைபே: தைவான் நாட்டில் சமீபத்தில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அப்போதும் அதில் இருந்த பெரிய கட்டிடமான தைபே 101 எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இருந்தது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

தைவான் நாட்டின் மிகப் பெரிய கட்டிடம் என்றால் அது தைபே 101 தான். சமீபத்தில் அங்கே 7.4 ரிக்டர் அளவில் மிக வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், மிக உயர்ந்த கட்டிடமான இது மிகக் குறைந்த சேதத்துடன் தப்பியது.

How a steel ball prevented tallest skyscraper from Taiwan earthquake

இந்தக் கட்டிடத்தின் நடுவே ஊசலாடும் பெண்டுலம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் மையத்தில் உள்ள பெரிய மஞ்சள் பெண்டுலம் அமைப்பு தான் நில அதிர்வை உள்வாங்கி இருக்கிறது.

பெண்டுலம் அமைப்பு: "டேம்பர் பேபி" என்ற அழைக்கப்படும் இந்த பெண்டுலம் எஃகு மூலம் உருவாக்கப்பட்டதாகும். 660 டன் எடையுள்ள அந்த பெண்டுலம், கட்டிடத்தின் மையத்தில் தரையில் இருந்து 1,000 அடிக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் அல்லது பலத்த காற்றின் போது, ​​கட்டிடம் ஊசலாடுவதை இந்த பெண்டுலம் 40% வரை குறைக்கும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்த பெண்டுலம் 87 மற்றும் 92வது தளங்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. 41 எஃகு அடுக்குகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இது சுமார் 18 அடி விட்டம் கொண்டது. அதிவேகமாகக் காற்று அடிக்கும்போதோ அல்லது நில நடுக்கம் ஏற்படும் போதும் இந்த பெண்டுலம் அதற்கேற்ப அட்ஜெஸ்ட் செய்து கட்டிடத்தைப் பாதுகாக்கும்

தைபே 101: இந்த தைபே 101 கட்டிடம் தான் ஒரு காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. இப்போதும் கூட இது தைவானில் ஒரு முக்கிய கட்டிடமாக உள்ளது. தைவானில் பூகம்பம் ஏற்பட்டால் இந்த கட்டிடம் பாதிக்கப்படக்கூடாது என்பதை மனதில் வைத்தே இதை வடிவமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதன் காரணமாகவே வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் இந்தக் கட்டிடம் பாதுகாப்பாக இருந்துள்ளது.

பொதுவாக உயரமான கட்டிடம் என்றால் அது காற்றின் வேகத்தில் அதிகம் தள்ளாடும். அதைச் சமாளிக்கவே இந்த காற்றைத் தணிக்கும் பந்து பயன்படுகிறது. பலத்த காற்று அல்லது நிலநடுக்கம் ஏற்படும் போது இந்த பெண்டுலம் அமைப்பு கட்டிடம் அசைவதை வெகுவாக குறைக்கும். உயரமான கட்டிடத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

அழகியல் ஈர்ப்பு: பல உயரமான கட்டிடங்களில் இவை இருக்கும். ஆனால், இவை கான்கரீட் பில்லர்களுக்கு இடையே மறைந்து இருக்கும். ஆனால், தைபே 101இல் அவை மக்கள் பார்வைக்குத் தெரியும் வகையில் இருக்கும். அதுவே பார்வையாளர்களை ஈர்க்கும் அழகியல் சார்ந்த விஷயமாக இருக்கிறது.

தைபே 101ல் உள்ள பெண்டுலம் பூகம்பங்கள் அல்லது சூறாவளிகளின் போது முன்னும் பின்னுமாக நகரும். இப்படி நகர்வது கட்டிடத்தில் ஏற்படும் எந்தவொரு தீவிரமான ஊசலாட்டத்தின் சக்தியையும் தடுக்கிறது. இது கட்டிடம் தள்ளாடுவதை 40 சதவீதம் வரை குறைக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட போது உள்ளே இருந்த அந்த பெண்டுலம் எப்படி முன்னும் பின்னும் நகர்ந்து கட்டிடத்தைப் பாதுகாத்தது என்பது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+