இளம்பெண்ணை பிடித்த கரடி.. கிட்ட வந்து மேலே ஏறி.. ஷாக்! அப்போ அந்த பெண் செஞ்ச காரியம் இருக்கே
ஜகார்த்தா: காட்டின் பரப்பளவு குறைவதால் மனித மிருக மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதுபோல நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
உலகமயமாக்கல், தொழில் புரட்சி ஆகியவற்றுக்கு பிறகு காடுகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் காடுகளிலும் கூட மனிதர்கள் ஆக்கிரமித்து கட்டிடங்களைக் கட்டி வருகின்றனர்.
இதனால் விலங்குகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்தே வருகிறது. காடுகளிலும் கூட டிரக்கிங் செல்கிறேன், ஹைகிங் செல்கிறேன் என்று மக்கள் சென்று விலங்குகளுக்குத் தொந்தரவு கொடுத்து வருகின்றனர்.

காடுகள்
காட்டின் பரப்பளவு குறைவதால் மனித மிருக மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதுபோல நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நீங்கள் உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்கிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள். அப்பாது திடீரென ஒரு பெரிய கருப்பு கரடி உங்களுக்கு அருகில் வந்து நின்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படியொரு சம்பவம் தான் மலையேறும் சிலருக்கு நடந்துள்ளது.

கரடி
அவர்கள் கொண்டு சென்ற உணவை மோப்பம் பிடித்துக் கொண்டு இந்த கரடி அவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளது. அவர்கள் மிக அருகே வந்த இந்த கரடி அந்த பெண்ணுக்கு அருகே எழுந்து நின்றுள்ளது. பக்கத்திலேயே இரண்டு பெண்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்துள்ளனர். அந்த கரடி எழுந்து நின்று பெண் ஒருவரை மோப்பம் பிடிக்கத் தொடங்கியது... மற்ற இரண்டு பெண்களும் அப்படியே உறைந்து போனார்கள்.

பொறுமை பொறுமை
அப்போது அந்த பெண் உடனே தனது மொபைலை எடுத்து கரடியுடன் வீடியோ எடுத்துள்ளார். அந்த கரடி அவ்வளவு அருகே வந்து நின்ற போதும், அந்த பெண் பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்துள்ளார். இதுதான் அந்த பெண்ணின் உயிரையே காப்பாற்றியுள்ளது. அந்த பெண்ணின் தலையைக் கரடி முகர்ந்து பார்த்த போதும், அவர் அமைதியாக நின்று கொண்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

கரடி செய்த காரியம்
மேலும், அந்த பெண்ணின் தொடையையும் மெல்ல நக்கத் தொடங்கியுள்ளது. அப்போது அந்த பெண் பொறுமையை இழக்கவில்லை. நல்வாய்ப்பாகக் கொஞ்ச நேரத்திலேயே அந்த கரடிக்கு அந்த பெண் மீதான ஆர்வம் குறைந்துவிட. அது அங்கிருந்து நகர்ந்துவிட்டது. மீண்டும் மீண்டும் அந்த கரடி வந்து சீண்டிய போதும் அந்த பெண் அமைதியாகவே இருந்துள்ளார். இந்த பொறுமைதான் அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளது.
|
ஷாக் வீடியோ
இது தொடர்பான வீடியோ இப்போது வேகமாகப் பரவி வருகிறது. கரடி அவ்வளவு கிட்ட வந்து முகர்ந்த போதிலும், அமைதியாக இருந்த அந்த பெண்ணை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். நெட்டிசன் ஒருவர், "அது கருப்பு கரடி என்பதால் தப்பித்தார்கள். இதுவே, அது ஒரு கிரிஸ்லி கரடியாக இருந்தால் நின்றிருந்தாலும் ஓடியிருந்தாலும் மரணம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள்
மற்றொருவர் "எங்கே ஓட வேண்டும் எங்கே சண்டையிட வேண்டும். எங்கே அமைதியாக இருக்க வேண்டும் என்பது அந்த பெண்ணுக்குத் தெளிவாகத் தெரிந்துள்ளது. இதன் காரணமாகவே அவர் தப்பியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார். கரடி தாக்குதலில் தப்பிப்பிழைக்க இதுவே மிகச் சிறந்த உதாரணம் என்றும் பலரும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications