மனைவியை எதைக் கொண்டு அடிக்கலாம்?... டெமோ காட்டிய சவூதி நபரால் பரபரப்பு
ரியாத்: சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு நபர் மனைவியை எப்படி அடிக்க வேண்டும். எதை வைத்து அடிக்கலாம், எதை வைத்து அடிக்கக் கூடாது என்று வீடியோவில் விளக்கிக் காட்டியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதை விட கொடுமை, அந்த வீடியோக் காட்சி, சவூதி அரேபியாவின் தேசிய டிவி சானலில் ஒளிபரப்பானதுதான். இதுகுறித்து ஏடபிள்யூடி என்ற செய்தி இணையதளம் செய்தி போட்டுள்ளது.
அதில், வாஷிங்டனைச் சேரந்த மத்திய கிழக்கு மீடியா ஆய்வுக் கழகம் இந்த வீடியோக் காட்சியை அமெரிக்காவில் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து இந்த கொடுமைக்கார நிகழ்ச்சி குறித்து வெளியுலகுக்குத் தெரிய வந்தது.
இந்த வீடியோவை சவூதி அரசும் அனுமதித்து அதன் பின்னரே அந்த நாட்டின் தேசிய டிவி சானலில் இது ஒளிபரப்பாகியது. அந்த நபரின் பெயர் காலித் அல் சக்பி. இவர் பேமிலி தெரப்பிஸ்ட்டாம். தற்போது இந்த வீடியோ யூடியூபிலும் கிடைக்கிறது.
அதில் அந்த நபர், ‘மனைவியை அடிப்பது என்பது சர்ச்சையாக பேசப்படுகிறது. ஆனால் அதை கடவுள் விரும்புகிறார். கடவுள் விருப்பம் அது. எனவே இந்தத் தடைகளை தாண்டி மனைவியை அடிப்பதை நாம் தொடர வேண்டும்.
மனைவியை அடிப்பதற்குத் தேவையான இஸலாமியச் சூழலை நாம உருவாக்க வே ண்டியது அவசியம். கோபத்தைக் காட்ட யாரும் மனைவியை அடிப்தபில்லை. மாறாக மனைவியை ஒழுங்கோடு இருக்க உறுதி செய்வதற்காகவே அடிக்கிறோம்.
அதேசமயம், கைக்குட்டை அல்லது சாதாரண பொருட்களை வைத்து மட்டுமே மனைவியை அடிக்க வேண்டும். மாறாக கூரிய பொருட்களை வைத்து அடிக்கக் கூடாது. மனைவியை அடிப்பதற்கு முன்பு அது அல்லா நமக்களித்த கடமை, என்பதை மனைவியிடம் கணவர்கள் சொல்லி விளக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications