திருமணமானவர்களுக்கான டேட்டிங் இணையதளம்: இது அமெரிக்காவில்...

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: திருமணமானவர்கள் விவாகரத்து பெறாமலும், துணையை பிரியாமலும் பிறரை டேட் செய்வதற்கு https://www.openminded.com/ என்ற அமெரிக்க இணையதளம் உதவி செய்கிறது.

டேட்டிங் போக வேண்டும் என்றால் தற்போது அமெரிக்கர்கள் பெரிதும் விரும்புவது டேட்டிங் இணையதளங்களைத் தான். திருமணமானவர்கள் கூட கணவன் மனைவிக்கு தெரியாமலும், மனைவி கணவனுக்கு தெரியாமலும் ஆன்லைன் மூலம் ஆட்களை தேர்வு செய்து டேட்டிங் செல்கிறார்கள்.

How to break free from monogamy without destroying marriage

டின்டர், ஓகேக்யூபிட் ஆகிய டேட்டிங் இணையதளங்களில் திருமணமானவர்கள் தங்களை சிங்கிள் என்று கூறி டேட்டிங் செல்கிறார்கள். இந்நிலையில் தான் ஓபன்மைன்டட் https://www.openminded.com/ என்ற இணையதளம் திருமணமான பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காரணம் திருமணமானவர்கள் தங்களைப் பற்றிய உண்மையை தெரிவித்தே டேட் செய்யலாம். திருமணமாகி கணவரையோ, மனைவியையோ பிரிய மனம் இல்லாமல் அதே சமயம் பிறருடன் பழக நினைப்பவர்களுக்கு பிடித்த இணையதளமாக ஓபன்மைன்டட் மாறியுள்ளது.

இது குறித்து ஓபன்மைன்டட் மூலம் டேட் செய்யும் ஜெசி என்பவர் கூறுகையில்,

என் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இரண்டாவது முறை திருமணம் செய்து குழந்தைகள் பெற்றேன். குழந்தைகள் வளர்ந்த பிறகு போர் அடித்தது. என் கணவரை விட்டுப்பிரிய மனம் இல்லை. இதையடுத்து ஓபன்மைன்டட் மூலம் பலரை டேட் செய்து வருகிறேன். நான் யாருடன், எங்கு செல்கிறேன் என்ற விவரத்தை என் கணவரிடம் தெரிவிக்கிறேன். இதன் மூலம் மனதில் பாரம் இன்றி நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+