சில்லிடும் இரவு.. ஊரெல்லாம் கோலாகலம்.. இப்படித்தான் சிகாகோ கிறிஸ்துமஸை கொண்டாடியது!

Subscribe to Oneindia Tamil

சிகாகோ: கிறிஸ்துமஸ் ஊரெல்லாம் கோலாகலமாக கொண்டாடி முடித்திருக்கிற இந்த நேரத்தில அமெரிக்கா போன்ற நாடுகளில் எப்படி கிறிஸ்துமஸ் கொண்டாடுறாங்கன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

இங்கே இப்போது கடும் குளிர் குளிர்காலம் . அதனால் எவ்வளவு அழகான புத்தாடை என்றாலும் கண்டிப்பா எல்லாம் ஜாக்கெட்டுக்குள்ள தான். சரி குளிர் தானே என்று சொல்லி எல்லாரும் வீட்டுக்குள் அடைந்து கொள்கிறார்களா அப்படின்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லணும். சரி அப்போ என்ன செய்றாங்க வாங்க பார்க்கலாம்.

எல்லா பக்கமும் லைட்ஸ் தான். டிசம்பர் மாதம் என்றாலே ஊரே ஒளிமயமாகி விடுகிறது . எல்லா இடங்களும் குறிப்பாக நம்ம ஊர்ல ஜங்ஷன்னு சொல்ற மாதிரி முக்கியமான இடங்களில் எல்லாம் ஒரே விளக்கு அலங்காரங்கள் தான் . அதுவும் இங்கே குளிர்ல இலைகள் எல்லாம் உதிர்ந்து மொட்டையாய் மாறிப் போன மரங்கள் எல்லாம் இப்போ லைட்ஸ் போட்டு அழகா ஜொலிக்க ஆரம்பிச்சிடறாங்க.

ஹேப்பியாக பனிச்சறுக்கு

ஹேப்பியாக பனிச்சறுக்கு

அப்புறம் என்ன குளிரைக் கூட கொண்டாட குளிரில் கூட அவங்க சந்தோசமா சறுக்கி சறுக்கி விளையாடுற பனிச்சறுக்கில் ஜாலியா இறங்கி புகுந்து விளையாடுகிறார்கள். சிகாகோவில் ரொம்ப பிரபலமான மில்லினியம் பார்க்ல இருக்கும் ஐஸ் ரிங்ல கிறிஸ்துமஸ்க்கு முந்தைய இரவு மக்கள் எப்படி ஜாலியா சறுக்கி என்ஜாய் செய்றாங்க என்று வீடியோவில் பார்ப்பீங்க.

சிகாகோ ஸ்பெஷல் பீன்

சிகாகோ ஸ்பெஷல் பீன்

அப்புறம் மில்லினியும் பார்க்ல இருக்கிற மிகப்பெரிய ஆர்ச். அந்த பீன் எவ்வளவு அழகு என்றால் அது அப்படியே சுற்றி இருக்கிற ஆளுயர கட்டடங்களை அச்சு அசலாக பிரதிபலிக்கும். கட்டடங்களை மட்டுமா பக்கத்தில் போய் போஸ் கொடுக்கிற நம்மையும் தான். அதனாலே செல்பி பிராயர்களும் புகைப்பட பிரியர்களுக்கும் அது சிறந்த இடம். தேனீ எல்லாம் தேன் கூட்ல எப்படி ஒட்டிக்குமோ அப்படி அங்கே கூடுகிற மக்கள் எல்லாம் ஒட்டிக்கொள்கிறார்கள். இந்த இடத்தை வளைத்து வளைத்து போட்டோ தான். ஏன்னா கிறிஸ்துமஸ் நேரத்தில் ஒளிமயமாக்கப்பட்ட பிம்பங்கள் அதில் தெரிவது செம அழகு என்பதால் தான்.

பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம்

பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம்

சிகாகோ டௌன்டவுன்ல வைக்கப்பட்டிருந்த மெகா மெகா கிறிஸ்துமஸ் மரம் வெகு உயரமானதாக இருந்தது. அது எவ்வளவு உயரம்னா பக்கத்தில இருந்த பெரிய கட்டடங்களின் கழுத்து வரை இருந்தது. எல்லாரும் ஜாலியா கிளிக் க்ளிக் செய்து ஒரே ஜாலியா சுத்திகிட்டு இருந்தாங்க. பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான் மகிழ்ச்சி தான்.

பிரமாண்ட கொண்டாட்டம்

இந்த கிறிஸ்துமஸ் பிரம்மாண்டமான கட்டடங்கள் நடுவே பிரமாண்டமாய் இருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.கொஞ்சம் இசையோடு அழகான பனிச்சறுக்கோடு ஒளியோடு அழகா கிறிஸ்துமஸ் கொண்டாடுற அந்தக் கொண்டாட்டத்தை இந்த வீடியோவில் நீங்களும் பார்க்கலாம்.

- Inkpena சஹாயா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+